Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எரியாத தெருவிளக்கு... முடியாத சாலை பணி!

எரியாத தெருவிளக்கு... முடியாத சாலை பணி!

எரியாத தெருவிளக்கு... முடியாத சாலை பணி!

எரியாத தெருவிளக்கு... முடியாத சாலை பணி!

ADDED : ஜூன் 04, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
குழியை மூட வேண்டும்!

திருமுருகன்பூண்டி - பூலுவப்பட்டி ரிங்ரோடு, செட்டிபாளையம் பிரிவு சந்திப்பில், காஸ் குழாய் பதிக்க தோண்டிய குழியை சரிவர மூடவில்லை. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

- ரவி, கணியாம்பூண்டி.

சுத்தம் செய்யலாமே...

திருப்பூர், நாச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பின்புறம் காலியிடம் சுத்தம் செய்யாமல், முட்புதர் மண்டி காணப்படுகிறது. ஊர்வன பள்ளிக்குள் வரும் அபாயம் உள்ளது.

- சுதா, நாச்சிபாளையம்.

பிளக்ைஸ அகற்றணும்!

திருப்பூர், அங்கேரிபாளையம், கொங்கு பள்ளி வீதியில் ரோட்டை ஆக்கிரமித்து பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அகற்ற வேண்டும்.

- லோகநாதன், அங்கேரிபாளையம்.

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், பெரியகடை வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் ஒரு மாதமாக வீணாகிறது. சாலை சேதமாகி, குழியாகி விட்டது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- பிரகாஷ், பெரியகடை வீதி. (படம் உண்டு)

'பேட்ஜ்ஒர்க்' அவசியம்

திருப்பூர் - அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் சிக்னல் ஸ்டாப்பில் ரோடு சேதமாகியுள்ளது. சறுக்கி விழுந்து வாகன ஓட்டிகள் விபத்தில் காயமடைகின்றனர். 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.

- வினோத், பங்களா ஸ்டாப். (படம் உண்டு)

திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம் - புதுார் பிரிவு சந்திப்பில் மழையால் சாலை சேதமாகி, குழியாகி விட்டது. விபத்து அபாயம் உள்ளது.

- சிவராமன், பெரிச்சிபாளையம். (படம் உண்டு)

காத்திருக்கும் ஆபத்து

திருப்பூர் தெற்கு, முதலிபாளையம், விருப்பண்ண கவுண்டம்பாளையத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி துாண்கள் விரிசல் அடைந்து, விழும் நிலையில் உள்ளது. பராமரித்து சரிசெய்ய வேண்டும்.

- பிரவீன், முதலிபாளையம். (படம் உண்டு)

அவிநாசி - திருப்பூர் ரோடு, அணைப்புதுார் பஸ் ஸ்டாப் நிழற்குடை சேதமாகி, பஸ்சுக்கு காத்திருப்பவர் தலையில் விழுந்து விடும் நிலையில் உள்ளது. சேதமாகிய பலகையை அகற்ற வேண்டும்.

- புகழேந்தி, அணைப்புதுார். (படம் உண்டு)

மழைநீர் தேக்கம்

மழை பெய்யும் போதெல்லாம், திருப்பூர், கூலிபாளையம் நால்ரோடு சந்திப்பில், மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.

- ரவிகுணசேகர், கூலிபாளையம். (படம் உண்டு)

நடக்க வழியில்லை

திருப்பூர், நல்லுார், மண்டல அலுவலகம் எதிரே மழைநீர் பாதி ரோடு வரை தேங்கியுள்ளது. பாதசாரிகள் நடந்து செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

- அழகுராஜன், நல்லுார். (படம் உண்டு)

தெருவிளக்கு எரியவில்லை

திருப்பூர், 52வது வார்டு, தென்னம்பாளையம், செல்வபுரத்தில், 15 நாட்களுக்கு மேலாக தெருவிளக்கு எரிவதில்லை. மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் சரிசெய்யவில்லை.

- சரவணன், செல்வபுரம். (படம் உண்டு)

திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் பல இடங்களில் தெருவிளக்கு எரிவதில்லை. இருளில் வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

- தாமேதரன், திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)

சாலை அமைக்கணும்!

திருப்பூர், கொடிகம்பம், மூர்த்திநகர் - பாரதிநகர் ரோடு மோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். ரோடு போட வேண்டும்.

- சங்கர்சதீஷ், கொடிக்கம்பம். (படம் உண்டு)

மரக்கிளையை வெட்டலாமே !

அவிநாசி, அரசு மேல்நிலைப்பள்ளி ஸ்டாப்பில், நெடுஞ்சாலைத்துறை வழிகாட்டி பலகையை சுற்றிலும் மரக்கிளைகள் சூழ்ந்து வளர்ந்துள்ளது.

- மகேஷ்குமார், அவிநாசி. (படம் உண்டு)

கால்வாய் அடைப்புதிருப்பூர், குமரன் ரோடு - பார்க்ரோடு இணைப்பு சாலை சந்திப்பில், சர்ச் பின்புற வீதியில், கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள மண்ணை அள்ளி, கால்வாயை சுத்தப்படுத்த வேண்டும்.

- சேவியர், குமரன் ரோடு. (படம் உண்டு)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us