/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வேகமாக நிரம்பும் குட்டைகள் மகிழ்ச்சி 'வெள்ளத்தில்' மக்கள் வேகமாக நிரம்பும் குட்டைகள் மகிழ்ச்சி 'வெள்ளத்தில்' மக்கள்
வேகமாக நிரம்பும் குட்டைகள் மகிழ்ச்சி 'வெள்ளத்தில்' மக்கள்
வேகமாக நிரம்பும் குட்டைகள் மகிழ்ச்சி 'வெள்ளத்தில்' மக்கள்
வேகமாக நிரம்பும் குட்டைகள் மகிழ்ச்சி 'வெள்ளத்தில்' மக்கள்
ADDED : ஜூன் 04, 2024 12:25 AM

அவிநாசி:போத்தம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர்பந்தல்பாளையத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அவிநாசி ஒன்றியம், தத்தனுார், போத்தம்பாளையம், சேவூர், தண்டுக்காரன்பாளையம், புலிப்பார், பாப்பாங்குளம், சின்னேரிபாளையம் கருமாபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதில் பல கிராமங்களில் உள்ள குட்டைகள் மற்றும் குளங்கள் ஆகியவற்றுக்கு நீர்வரத்து வரத் துவங்கியது. குறிப்பாக, போத்தம்பாளையம் ஊராட்சி, தண்ணீர்பந்தல் பாளையம் கிராமத்தில், உள்ள மாகாளியம்மன் குட்டை ஏறத்தாழ, 12 ஆண்டுகளுக்கு பின், நிரம்பி வெள்ளம் வெளியேறியது.
அதே பகுதியிலுள்ள பொன்னமராவதி குட்டை, பிஞ்சைவளி குட்டை, செம்மம்பாளையம் குட்டை ஆகியனவும், வெள்ளத்தால் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இதனால், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.