/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி; உடுமலை அணி அபார வெற்றி மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி; உடுமலை அணி அபார வெற்றி
மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி; உடுமலை அணி அபார வெற்றி
மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி; உடுமலை அணி அபார வெற்றி
மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி; உடுமலை அணி அபார வெற்றி
ADDED : ஜூன் 18, 2024 11:09 PM

உடுமலை;உடுமலையில் நடந்த, மாநில அளவிலான கால்பந்து போட்டியில், உடுமலை ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியினர் கோப்பையை வென்றனர்.
உடுமலை ஜே.எப்.சி., கிளப் சார்பில், மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி, நேதாஜி மைதானத்தில் மூன்று நாட்கள் நடந்தது.
இப்போட்டியில், 40 அணிகள் பங்கேற்றன. முதல் இரண்டு நாட்களில், லீக் முறையில் போட்டி நடந்தது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்று, அரை இறுதிப்போட்டிக்கு சூலுார், பழநி, வால்பாறை மற்றும் உடுமலை கால்பந்து அணிகள் தேர்வாகின. இறுதி நாளில் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடந்தன.
முதல் அரை இறுதி போட்டியில், வால்பாறை மற்றும் பழநி அணிகள் பங்கேற்றதில், டை பிரேக்கர் முறையில் வால்பாறை அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது அரை இறுதி போட்டியில், உடுமலை மற்றும் சூலுார் அணிகள் பங்கேற்றதில், அதே டை பிரேக்கர் முறையில், உடுமலை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதிப்போட்டியிலும், உடுமலை மற்றும் வால்பாறை அணிகள் மோதியதில், டை பிரேக்கர் முறையில் உடுமலை அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.
உடுமலையின் சார்பில், உடுமலை ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்கள் முதலிடத்திலும், வால்பாறை அணியின் சார்பில் மெர்லின் புட்பால் கிளப் அணியினர் இரண்டாவது இடத்திலும் வெற்றி பெற்றனர். முதல் பரிசாக, 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக, 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் நான்காம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் வீரர்களுக்கு வழங்கப்பட்டது. போட்டிகளை ஜே.எப்.சி., கிளப் பயிற்சியாளர் தருண்குமார் ஒருங்கிணைத்தார்.