/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பராமரிப்பில்லாத நடைபாதை; பயன்படுத்த முடியாமல் வீண் பராமரிப்பில்லாத நடைபாதை; பயன்படுத்த முடியாமல் வீண்
பராமரிப்பில்லாத நடைபாதை; பயன்படுத்த முடியாமல் வீண்
பராமரிப்பில்லாத நடைபாதை; பயன்படுத்த முடியாமல் வீண்
பராமரிப்பில்லாத நடைபாதை; பயன்படுத்த முடியாமல் வீண்
ADDED : ஜூன் 18, 2024 11:04 PM

உடுமலை:உடுமலை, பழநி ரோட்டில், அமைக்கப்பட்ட நடைபாதை பயன்பாடில்லாமல், புதர் மண்டி காணப்படுகிறது. இதனை மீட்டு, பயன்படுத்தும் வகையில் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை - பழநி தேசிய நெடுஞ்சாலையில், தனியார் கல்லுாரி மற்றும் 4 தனியார் பள்ளிகள் உள்ளன. மேலும், பி.எஸ்.என்.எல்., அலுவலகம், குடியிருப்பு மற்றும் அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளன.
இதனால், தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், தேசிய நெடுஞ்சாலையை எளிதாக கடக்கவும், விபத்துக்களை தடுக்கும் வகையிலும், ரோட்டோரத்தில், நடைபாதை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து, அவை பராமரிக்கப்படாததால், முட் செடிகள் முளைத்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பிரதான போக்குவரத்து ரோட்டையை பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.
இதனால், விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அருகிலுள்ள அரசு ஊழியர் குடியிருப்புகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலும் ஏற்படுகிறது.
எனவே, நடைபாதையிலுள்ள புதர்களை அகற்றி, புதுப்பிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், பழநி ரோட்டில் அதிவேகமாக வரும் வாகனங்களால், மாணவர்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடக்கிறது.
எனவே, இப்பகுதியில் மையத்தடுப்புகள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளுக்கு முன் வேகத்தடுப்புகள் அமைத்து, மாணவர்கள் ரோட்டை கடக்கும் வகையில் எச்சரிக்கை குறியீடு அமைக்க வேண்டும்.