/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வணிகவியல், கணினி படிப்புகள் மீது மாணவர்கள் ஆர்வம் வணிகவியல், கணினி படிப்புகள் மீது மாணவர்கள் ஆர்வம்
வணிகவியல், கணினி படிப்புகள் மீது மாணவர்கள் ஆர்வம்
வணிகவியல், கணினி படிப்புகள் மீது மாணவர்கள் ஆர்வம்
வணிகவியல், கணினி படிப்புகள் மீது மாணவர்கள் ஆர்வம்
ADDED : ஜூன் 18, 2024 11:27 PM
திருப்பூர்:பள்ளி படிப்பு முடித்த மாணவ, மாணவியர், தங்களின் கல்லுாரி கனவை நனவாக்கும் நோக்கில், கல்லுாரிகளில் இணைவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, வணிகம் மற்றும் கம்ப்யூட்டர் துறை சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பிளஸ் 2 முடித்த நிலையில், கல்லுாரி படிப்பை தொடர விருப்பமுள்ள மாணவ, மாணவியர், தாங்கள் விரும்பிய பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, விரும்பிய கல்லுாரிகளில் விண்ணபித்தனர். தொடர்ச்சியாக கவுன்சிலிங் நடந்து வருகிறது.
எங்கிருந்தும் எந்த கல்லுாரிக்கு வேண்டுமானாலும் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை அமலில் இருப்பதால், அரசு, சுயநிதி கல்லுாரிகளில் விண்ணப்பங்கள் குவிந்தன. எதிர்கால குறிக்கோளோடு குறிப்பிட்ட பாடப்பிரிவை பெறுவதில் பல மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கிடைத்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, பட்டப்படிப்பு படித்துவிட்டால் போதும் என்ற மனநிலையிலும் சில மாணவ, மாணவியர் உள்ளனர்.
அவிநாசி கல்லுாரிமேம்படுத்தப்படுமா?
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடம் தேர்ந்தெடுப்பதில் அரசு கல்லுாரிகளில் மாணவ, மாணவியர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவிநாசி, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட புதிதாக உருவான கல்லுாரிகளிலும் தமிழ் துறையை பலரும் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஆனால், அவிநாசி கல்லுாரியில் தமிழ் பாடப்பிரிவு இல்லை. தமிழ், எம்.காம்., மற்றும் எம்.காம்., ஐ.பி., அதில் ஆராய்ச்சி படிப்பு என, சில புதிய பாடப்பிரிவுகளை அனுமதிக்க வேண்டும் என, கடந்த சில ஆண்டுகளாகவே, அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.
அதே போன்று, அறிவி யல் படிப்பு சார்ந்த துறைகளை அனுமதிக்க வேண் டும் எனவும், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். புதிதாக உருவாக்கப்பட்ட கல்லுாரிகளில், அவிநாசி கல்லுாரியில் மட்டும் தான் குறைந்தளவு பாடப்பிரிவுகள் உள்ளன. இவ்விவகாரத்தில், தொகுதி எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., கவனம் செலுத்த வேண்டும்.