/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உடுமலை - மூணாறு ரோட்டில் 'எஸ்' வளைவில் சிக்கிய லாரி 11 மணி நேரம் போக்குவரத்து துண்டிப்பு உடுமலை - மூணாறு ரோட்டில் 'எஸ்' வளைவில் சிக்கிய லாரி 11 மணி நேரம் போக்குவரத்து துண்டிப்பு
உடுமலை - மூணாறு ரோட்டில் 'எஸ்' வளைவில் சிக்கிய லாரி 11 மணி நேரம் போக்குவரத்து துண்டிப்பு
உடுமலை - மூணாறு ரோட்டில் 'எஸ்' வளைவில் சிக்கிய லாரி 11 மணி நேரம் போக்குவரத்து துண்டிப்பு
உடுமலை - மூணாறு ரோட்டில் 'எஸ்' வளைவில் சிக்கிய லாரி 11 மணி நேரம் போக்குவரத்து துண்டிப்பு
ADDED : ஜூன் 20, 2024 02:44 AM

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலையிலிருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் ரோட்டில், நேற்று முன்தினம் இரவு, மூணாறிலிருந்து, நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த பார்சல் சர்வீஸ் லாரி, உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இரவு, 11:00 மணிக்கு, உடுமலை அருகே, தமிழக பகுதியிலுள்ள, ஆபத்தான, 'எஸ்' வளைவில் திரும்பும் போது, எதிர்பாராத விதமாக, லாரியின் முன்பகுதி, பல நுாறு அடி மலைச்சரிவு பள்ளத்தில் விழும் வகையில் சென்றது; உடனடியாக டிரைவர் லாரியை நிறுத்தியதால், விபத்து தடுக்கப்பட்டது.
வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு லாரி சிக்கிக் கொண்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
வனத்தில் இருபுறமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், பல கி.மீ.,க்கு இரவு முழுதும் காத்திருந்தன.
நேற்று காலை, பொக்லைன் இயந்திரங்கள், மீட்பு வாகனங்கள் எடுத்து வரப்பட்டு, பள்ளத்தில் விழும் நிலையிலிருந்த பார்சல் சர்வீஸ் வாகனம், 9:30 மணிக்கு பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இதையடுத்து, வாகன போக்குவரத்து துவங்கியது.
இரு மாநிலங்களை இணைக்கும் பிரதான வழித்தடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால், இரு மாநில மக்களும் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று காலை 10:00 மணி வரை, அவசர மருத்துவ சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டது.