Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விதி பின்பற்றினால் தொழிலுக்கு மதிப்பு

விதி பின்பற்றினால் தொழிலுக்கு மதிப்பு

விதி பின்பற்றினால் தொழிலுக்கு மதிப்பு

விதி பின்பற்றினால் தொழிலுக்கு மதிப்பு

ADDED : ஜூன் 20, 2024 04:48 AM


Google News
திருப்பூர், : ''ஆர்பிட்ரேஷன் கவுன்சில் விதிமுறைகளைப் பின்பற்றி, கவுன்சிலில் இணைந்து பணியாற்றினால், தொழில் நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு'' என்று ஆர்பிட்ரேஷன் கவுன்சில் தலைவர் கருணாநிதி கூறினார்.

திருப்பூர் பின்னலாடை தொழில் அமைப்புகள் உறுப்பினராக கொண்ட, ஆர்பிட்ரேஷன் கவுன்சில், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தில்( சைமா) இயங்கி வருகிறது. நீண்ட நாட்களாக, பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வரும் தொழில் அமைப்புகள், கவுன்சிலில் உறுப்பினராக இருக்கின்றன.

தொழில் ரீதியான சரக்கு பரிவர்த்தனை, பண பரிவர்த்தனை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண ஆர்பிட்ரேஷன் கவுன்சில் சேவையாற்றி வருகிறது. இதன் நிர்வாகக்குழு கூட்டம், தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. செயலாளர் ராமசாமி, கவுன்சில் செயல்பாடுகள் குறித்து பேசினார். நிட்டிங் மற்றும் பிரின்டிங் நிறுவனங்கள், தங்கள் பாதிப்புகள் குறித்து புகார் அளித்தன.

-----

பாதிப்பு இன்றி தீர்வு சாத்தியம்

தொழில்முனைவோர், பாதுகாப்பாக தொழில் செய்ய ஏதுவாக, சங்கத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். கவுன்சிலில் உறுப்பினராக உள்ள சங்கத்தினர், முதலில் கவுன்சில் விதிமுறைகளை நன்கு அறிய வேண்டும். நிறுவனத்தின் பரிவர்த்தனை தொடர்பான ரசீதுகளில், கவுன்சில் விதிமுறைகளை அச்சிட வேண்டும். அப்போதுதான், எவ்வகை பிரச்னை ஏற்பட்டாலும், சட்டரீதியாக எதிர்கொண்டு பாதிப்பு இல்லாதவகையில் தீர்வு வழங்க முடியும்.- கருணாநிதி, தலைவர், 'ஆர்பிட்ரேஷன் கவுன்சில்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us