/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போதை கடத்தியதாக மிரட்டி ரூ.16 லட்சம் நுாதனமாக பறிப்பு போதை கடத்தியதாக மிரட்டி ரூ.16 லட்சம் நுாதனமாக பறிப்பு
போதை கடத்தியதாக மிரட்டி ரூ.16 லட்சம் நுாதனமாக பறிப்பு
போதை கடத்தியதாக மிரட்டி ரூ.16 லட்சம் நுாதனமாக பறிப்பு
போதை கடத்தியதாக மிரட்டி ரூ.16 லட்சம் நுாதனமாக பறிப்பு
ADDED : ஜூன் 20, 2024 02:35 AM
திருப்பூர்:திருப்பூரைச் சேர்ந்த, 45 வயது நபரை சமீபத்தில், மொபைலில் தொடர்பு கொண்ட ஒருவர், பிரபல பன்னாட்டு கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, 'மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு போதைப்பொருள் அனுப்பியுள்ளீர்கள்; மும்பை சைபர் கிரைம் போலீசார், வீடியோ காலில் உங்களிடம் விசாரிப்பர்' என்றார். அவரும் அவ்வாறே செய்ய, எதிர்தரப்பில் போலீஸ் உடையில், போலீசார் அறையில் இருந்தவாறு பேசிய நபர், 'எவ்வித தவறும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய, 16 லட்சம் ரூபாயை அனுப்ப வேண்டும்' என்றார்.
அதை உண்மை என நம்பிய அந்த திருப்பூர் நபர், 16 லட்சம் ரூபாயை அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பினார். பணத்தை பெற்றவர்கள், திரும்ப அழைக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த நபர், திருப்பூர் மாநகர 'சைபர் கிரைம்' போலீசில் புகாரளித்தார். போலீசார் கூறுகையில், 'மோசடிக்காரர்கள் சில நிமிடங்கள் கூட சிந்திக்க விடாமல் பணம் பறிக்கின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்,'' என்றனர்.