/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பல்லடம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் பல்லடம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
பல்லடம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
பல்லடம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
பல்லடம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜூன் 03, 2024 01:05 AM
திருப்பூர், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நாளை காலை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி பல்லடம் ரோட்டில் போக்குவரத்து மாற்றங்களை மாநகர போலீசார் மேற்கொண்டு அறிவுறுத்தியுள்ளனர்.
l பல்லடம் மற்றும் வித்யாலயாவில் இருந்து வரும் பஸ், கனரக, இலகுரக சரக்கு வாகனங்கள் வீரபாண்டி பிரிவில் இருந்து, வீரபாண்டி ஸ்டேஷன் வழியாக பலவஞ்சிபாளையம், சந்திராபுரம், உஷா தியேட்டர் வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.
l மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து பல்லடம் நோக்கி செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தெற்கு ஸ்டேஷன் வழியாக தாராபுரம் ரோடு, சந்திராபுரம், பலவஞ்சிபாளையம், வீரபாண்டி ஸ்டேஷன் வழியாக, வீரபாண்டி பிரிவு சென்று பல்லடம் செல்ல வேண்டும்.
l திருப்பூரிலிருந்து பல்லடம் நோக்கி செல்லும் கார், ஆட்டோ மற்றும் டூவீலர்கள் சந்தைப்பேட்டை வழியாக எம்.ஜி.ஆர்., மன்றம், முத்தையன் கோவில் சென்று, தமிழ்நாடு தியேட்டர் முன்பு பல்லடம் மார்க்கமாக செல்ல வேண்டும்.
l பல்லடத்தில் இருந்து வரும் கார், ஆட்டோ மற்றும் டூவீலர் வாகனங்கள் தமிழ்நாடு தியேட்டர் வழியாக முத்தையன் கோவில்,எம்.ஜி.ஆர்., மன்றம், சந்தைபேட்டை வழியாக திருப்பூர் நோக்கி செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம், நாளை அதிகாலை, 4:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று, திருப்பூர் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.