
சட்டசபை தொகுதிகளுக்குதனித்தனியாக அரங்குகள்
ஆறு சட்டசபை தொகுதிக்கும் தனித்தனியே ஓட்டு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் ரூமிலிருந்த கன்ட்ரோல் யூனிட்கள் எடுத்துவரப்பட்டு, அந்தந்த தொகுதிக்கான அரங்குகளில் போடப்பட்டுள்ள டேபிள்களில் வைத்து, எண்ணப்படும்.
ஓட்டு எண்ணிக்கை மையம் தயார்
ஓட்டு எண்ணிக்கை துவங்க இன்னும் 24 மணி நேரமே உள்ளது. பாதுகாப்பு, தடையில்லா மின்சாரம், சுகாதாரம், உணவுக்கூடம், அந்தந்த தொகுதிக்கான எண்ணிக்கை மையத்துக்கு மட்டும் செல்லும் வகையில் தடுப்பு வழி என அனைத்து கட்டமைப்பு பணிகளும் முடிக்கப்பட்டு,எல்.ஆர்.ஜி., கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் உள்ளது.
பார்வையாளர்கள்ஆலோசனை
திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு, ஓட்டு எண்ணிக்கை பார்வையாளராக ஓம்பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா, ஓட்டு எண்ணிக்கை பார்வையாளர் ஓம்பிரகாஷ் ஆகிய இருவரும், மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இரு பார்வையாளர்களும், ஆளுக்கு தலா மூன்று சட்டசபை தொகுதி ஓட்டு எண்ணிக்கை பணிகளை பார்வையிடுவர்.