/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சத்துணவு மையங்கள் தயார்ப்படுத்த உத்தரவு சத்துணவு மையங்கள் தயார்ப்படுத்த உத்தரவு
சத்துணவு மையங்கள் தயார்ப்படுத்த உத்தரவு
சத்துணவு மையங்கள் தயார்ப்படுத்த உத்தரவு
சத்துணவு மையங்கள் தயார்ப்படுத்த உத்தரவு
ADDED : ஜூன் 03, 2024 01:04 AM
திருப்பூர்;வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்கள் தயாராவது, உணவு பொருட்கள் இருப்பு நிலை அறிந்து அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்வது குறித்து சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பள்ளி திறப்புக்கு இரண்டு நாட்கள் முன் மையப் பணியாளர் சத்துணவு மையங்களுக்கு சென்று சுத்தம் செய்திட வேண்டும். எண்ணெய், முட்டை, கொண்டைக் கடலை, பாசிப்பயறு உள்ளிட்ட உணவு பொருட்கள் நிலை, தரமாக உள்ளதா, காலாவதியாகி விட்டதா என்பதை கண்டறிந்து, உடனே அப்புறப் படுத்த வேண்டும்.
பள்ளி துவங்கும் நாளில் இருந்து, 45 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை சேமிப்பு கிடங்கில் இருந்து பெற்று, புதிய இருப்பை உறுதி செய்ய வேண்டும். விடு முறைக்கு பின் பள்ளி திறப்பதால், குடிநீரின் தரத்தை ஆராய்ந்த பின் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
பூச்சிகள், ஊர்வன பிரவேசிக்காத வகையில், சத்துணவு மையங்களை சுத்தம், சுகாதாரமாக வைத்திருப்பதுடன், சமையல் பாத்திரம், தட்டு, டம்ளர் உள்ளிட்டவற்றை கழுவி, உலர வைத்த பின்பே பயன்படுத்த வேண்டும். முட்டைகளை வேக வைப்பதற்கு முன், தண்ணீரிலிட்டு பரிசோதித்து, நல்ல முட்டைகளை மட்டும் வேக வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.