/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோடை விடுமுறை நிறைவு; கோர்ட்கள் இன்று திறப்பு கோடை விடுமுறை நிறைவு; கோர்ட்கள் இன்று திறப்பு
கோடை விடுமுறை நிறைவு; கோர்ட்கள் இன்று திறப்பு
கோடை விடுமுறை நிறைவு; கோர்ட்கள் இன்று திறப்பு
கோடை விடுமுறை நிறைவு; கோர்ட்கள் இன்று திறப்பு
ADDED : ஜூன் 03, 2024 01:04 AM
திருப்பூர்;கோடை விடுமுறை முடிந்து திருப்பூர் மாவட்ட கோர்ட்கள் இன்று முதல் இயங்கவுள்ளன.
திருப்பூர் பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலக வளாகம் அருகே, திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் செயல்படுகிறது. இங்கு மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் உள்ளிட்ட மாவட்ட கோர்ட்கள், உரிமையியல், குற்றவியல் நடுவர் உள்ளிட்ட பல்வேறு கோர்ட்கள் உள்ளன.
இங்குள்ள கோர்ட்களுக்கு வழக்கம் போல் கோடை விடுமுறை கடந்த மே முதல் தேதியில் துவங்கியது. இந்த விடுமுறைக்குப் பின் இன்று முதல் அனைத்து கோர்ட்களும் வழக்கம் போல் செயல்படும்.
கோடை விடுமுறையிலும் விடுமுறை கால சிறப்பு அமர்வுகள் செயல்பட்டன. மகிளா கோர்ட், வன்கொடுமை வழக்கு விசாரணை சிறப்பு கோர்ட் ஆகியவற்றிலும் விசாரணைகள் நடந்தன. கிரிமினல் வழக்கு விசாரணை கோர்ட்களும் இயங்கின. சிவில் வழக்கு விசாரணை கோர்ட்கள் விடுமுறை காரணமாக இயங்கவில்லை. கோடை விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இவை அனைத்தும் இன்று முதல் வழக்கம் போல் செயல்படும்.
--