ADDED : ஜூலை 19, 2024 08:54 PM
திருப்பூர்;திருப்பூர், வாவிபாளையம், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, காமராஜர் பிறந்த நாள் விழா, மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் நான்கு மதிப்பெண் பெற்ற, மித்ரா, சுதர்சன், கோகுல்ராஜ் பூஜா, ஆகியோருக்கு முறையே, ரொக்கபரிசு வழங்கப்பட்டது. பாட வாரியாக நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றவர்களும் பாராட்டு பெற்றனர். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு நடனம், பேச்சு, கட்டுரை, யோகா, சிலம்பம், பரதம், நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சிபிபிஎஸ்., கிரியேஷன்ஸ் தீபக்குமார், அஸ்வதி கார்மெண்ட்ஸ் நித்தின், பி.டி.ஏ., தலைவர் கோவிந்தராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.