/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 10 ஆண்டு பணி முடித்தால் பச்சை அட்டை சுமைப்பணி தொழிலாளர் வலியுறுத்தல் 10 ஆண்டு பணி முடித்தால் பச்சை அட்டை சுமைப்பணி தொழிலாளர் வலியுறுத்தல்
10 ஆண்டு பணி முடித்தால் பச்சை அட்டை சுமைப்பணி தொழிலாளர் வலியுறுத்தல்
10 ஆண்டு பணி முடித்தால் பச்சை அட்டை சுமைப்பணி தொழிலாளர் வலியுறுத்தல்
10 ஆண்டு பணி முடித்தால் பச்சை அட்டை சுமைப்பணி தொழிலாளர் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 19, 2024 08:54 PM
திருப்பூர்:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட அமைப்பாளர் முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுசெயலாளர் கோவிந்தராஜ், மாநில துணை தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில குழு வெங்கடாசலம், மாவட்ட குழுவை சேர்ந்த சரவணன் ஆகியோர் பேசினர்.
சம்பளம் கேட்டு போராடியவர் மீது முன்னாள் மண்டல மேலாளர் வழங்கிய பணிமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கடந்த, 2016 முதல் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை, 'அவுட்சோர்சிங்' முறையில் விட்டு கமிஷன் எடுப்பதை நிறுத்த வேண்டும்.
கோவை மண்டலத்துக்கு இணையாக, அட்டிக்கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும்; 10 ஆண்டு பணி முடித்த இளஞ்சிவப்பு அட்டை தொழிலாளர்களுக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும். வாகனங்களில் ஓவர்லோடு ஏற்ற நிர்பந்தம் செய்யும் கிடங்கு பொறுப்பாளர், கண்காணிப்பாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழல் முறைகேட்டுக்கு வழிவகுக்கும் அவுட்சோர்சிங் ஞாயிறு முறையை கைவிட வேண்டும். பணி பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.