Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ செல்லாண்டியம்மன் கோவிலில்  குண்டம் திருவிழா துவக்கம்

செல்லாண்டியம்மன் கோவிலில்  குண்டம் திருவிழா துவக்கம்

செல்லாண்டியம்மன் கோவிலில்  குண்டம் திருவிழா துவக்கம்

செல்லாண்டியம்மன் கோவிலில்  குண்டம் திருவிழா துவக்கம்

ADDED : ஜூலை 19, 2024 08:55 PM


Google News
திருப்பூர்:திருப்பூர் செல்லாண்டிம்மன் கோவில், 18 ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா, பூச்சாட்டுடன் நேற்று துவங்கியது.

திருப்பூர் மாநகரின் காவல் தெய்வமாகிய, செல்லாண்டிம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடிக்குண்டம் திருவிழா நடந்து வருகிறது. இந்தாண்டு திருவிழா, நேற்று பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது.

வரும் 22ல் மகாமுனி பூஜையும், 23ல் கணபதி ேஹாமம் மற்றும் காப்புக்கட்டுதல், 24ல் திருப்பூர் பெருமாள் கோவிலில் இருந்து அம்மனுக்கு சீர் எடுத்து வரும் நிகழ்ச்சி, 25ல், கோட்டை முனியப்பன் கோவிலில் இருந்து சூலம் எடுத்து வரும் நிகழ்ச்சி, 26ல் டவுன் மாரியம்மன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

தீர்த்தம் எடுத்து வந்து, 27ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜை, 28ல் பால்குடம் ஊர்வலம், 29 ல் குண்டம் திறப்பு, அக்னியிடுதல் நிகழ்ச்சியும், 30ம் தேதி அதிகாலை, 5:00 மணி முதல் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், காலை, 10:00 மணிக்கு, அக்னி அபிேஷகம், மாவிளக்கு பொங்கல் விழாவும், அன்னதானமும் நடக்கிறது. அன்று மாலை, அம்மன் திருவீதியுலாவும், மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஆக., 2ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us