திருப்பூர்;பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் லவ்குஷ்குமார், 23. காங்கயத்தில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த, 2ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்க சென்ற போது, காலில் பாம்பு போன்ற ஏதோ விஷ பூச்சி கடித்தது.
நண்பர்களிடம் தெரியப்படுத்திய பின், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்தார். உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல், பெங்களூருக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல முயன்ற போது, பரிதாபமாக இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.