/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோடை விடுமுறை நிறைவு பஸ்கள் 'ஹவுஸ்புல்' கோடை விடுமுறை நிறைவு பஸ்கள் 'ஹவுஸ்புல்'
கோடை விடுமுறை நிறைவு பஸ்கள் 'ஹவுஸ்புல்'
கோடை விடுமுறை நிறைவு பஸ்கள் 'ஹவுஸ்புல்'
கோடை விடுமுறை நிறைவு பஸ்கள் 'ஹவுஸ்புல்'
ADDED : ஜூன் 10, 2024 02:09 AM
திருப்பூர்;கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பஸ்களில் நேற்று குழந்தைகளுடன் பெற்றோர் கூட்டம் அலைமோதியது.
வெளியூர் சென்றவர்கள் திருப்பூர் திரும்ப ஏதுவாக திருச்சி, தஞ்சாவூர், தேனி, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்கியது. காலை சற்று கூட்டம் குறைவாக இருந்தாலும், மதியத்துக்கு பின், மாலையில் கூட்டம் சற்று அதிகரித்தது.
நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதாலும், சர்வீஸ் பஸ்களில் வந்திறங்கியவர்கள் நெரிசலாலும், டவுன், மினிபஸ், ேஷர் ஆட்டோக்களிலும் வழக்கத்தை விட கூட்டம் சற்று அதிகரித்தது. கோவில்வழி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்த பஸ்களை விட, புறப்பட்டு செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதே நேரம், திருச்சி, கரூர், காங்கயம் மார்க்கமாக திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்த திருச்சி பஸ்களில், 70 முதல், 90 பயணிகள் வந்திறங்கினர். எப்போது பரபரப்பாக இருக்கும் மத்திய பஸ் ஸ்டாண்ட் நேற்று பயணிகள் கூட்டத்தால், நிறைந்து காணப்பட்டது.
பெற்றோர், குழந்தைகள் சகிதமாக கையில் பைகளுடன் பலர் பயணித்தனர். இன்று பள்ளிகள் திறப்பு என்பதால், புதுமார்க்கெட் வீதி, பெரியகடைவீதி, கே.எஸ்.சி., ஸ்கூல் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ஸ்கூல்பேக், லஞ்ச்பேக், பள்ளிக்கான உபகரணங்கள் வாங்க பெற்றோர் திரண்டனர்.
புதிய சீருடைகளை உடனடியாக தைத்து தரும் டெய்லர் கடைகளும் ஒரே நாளில் பிஸியானது.. வெளியூரில் இருந்து திருப்பூர் வந்த பஸ்களில் மதியம் துவங்கிய கூட்டம் இரவு வரை நீடித்தது. மொத்தத்தில் நேற்றைய நாள் நகரில் ஒரு பண்டிகையாக மாறியது.