ADDED : ஜூன் 10, 2024 02:08 AM
திருப்பூர்:நாமக்கல்லைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 19. திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த 5ம் தேதி இரவு அவர் நடந்து சென்றார். அப்போது ஒரு பைக்கில் வந்த மூன்று நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது மொபைல் போனைப் பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இது தொடர்பாக அஜ்மீர், 20; சந்தோஷ் பாண்டி,21 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ஈடுபட்ட மற்றொரு நபரை போலீசார்தேடுகின்றனர்.