/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தமிழ் என்பது சுவாசத்தில் கலந்திருக்க வேண்டும்! தமிழ் என்பது சுவாசத்தில் கலந்திருக்க வேண்டும்!
தமிழ் என்பது சுவாசத்தில் கலந்திருக்க வேண்டும்!
தமிழ் என்பது சுவாசத்தில் கலந்திருக்க வேண்டும்!
தமிழ் என்பது சுவாசத்தில் கலந்திருக்க வேண்டும்!
ADDED : ஜூலை 20, 2024 11:17 PM

'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்குங் காணோம்' என, நுாறாண்டுகளுக்கு முன்பே பாடியவன் மகாகவி பாரதி.
அனைத்து துறைகளிலும் ஆங்கிலம் அவசியம் என்றாகிவிட்ட நிலையில், ஆங்கிலக்கல்வியின் ஆதிக்கத்தால் தமிழ் மொழியை பயில்வது, இன்றைய தலைமுறையினருக்கு கடினமானதாக மாறியிருக்கிறது.'ஆங்கிலம் ஒரு மொழி; அதை நேசிப்பதும், அதில் புலமை பெறுவதும் அவசியம்; ஆனால், தமிழ் என்பது, தாய்மொழி; அது சுவாசத்தில் கலந்திருக்க வேண்டும்' என்பது தான், தமிழ் ஆர்வலர்களின் அறை கூவலாக இருந்து வருகிறது.இதை உணர்ந்தே தமிழக அரசும், பள்ளி, கல்லுாரிகளில் இலக்கிய மன்றங்களை ஏற்படுத்தி, மாணவ சமுதாயத்தினர் மத்தியில் தமிழை வளர்க்க ஊக்குவிப்பு வழங்கி வருகின்றன. அதன்படி, திருப்பூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரி, தமிழ்த்துறை சார்பில், இலக்கிய மன்றக்கூட்டம் நடந்தது.தமிழ்த்துறை தலைவர் உஷா வரவேற்றார். கல்லுாரி செயலர் டாக்டர் ெஹலன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சகாய தமிழ்ச்செல்வி, முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விக்னேஷ்வரா வித்யாலயா பள்ளி தமிழாசிரியர் ஆழ்வை கண்ணன், 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற தலைப்பில் பேசுகையில், 'தொன்மை, முன்மை, எளிமை, ஒளிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என, 16 சிறப்புக்களை ஒருங்கே பெற்றது தமிழ்; இந்த பெருமை, வேறந்த மொழிகளுக்கும் இல்லை. இதனால் தான், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தும் கிடைத்தது. தற்போது மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து பெற முயற்சி செய்து வருகின்றனர்,'' என்றார்.