/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நீங்க தான் 'ஹீரோ' போதித்தவன் கம்பன்! நீங்க தான் 'ஹீரோ' போதித்தவன் கம்பன்!
நீங்க தான் 'ஹீரோ' போதித்தவன் கம்பன்!
நீங்க தான் 'ஹீரோ' போதித்தவன் கம்பன்!
நீங்க தான் 'ஹீரோ' போதித்தவன் கம்பன்!
ADDED : ஜூலை 20, 2024 11:18 PM

'கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்' என்பார்கள். அந்தளவு இலக்கியம், மொழி சார்ந்த புலமை பெற்றவராக இருந்திருக்கிறார் கம்பர். கம்பனின் புகழ் பரவ, ஆங்காங்கே கம்பன் கழகங்கள் செயல்படுகின்றன. இளைய சமுதாயத்தினர் மத்தியில் கம்பனை கொண்டு சென்று சேர்க்கும் பணியை இக்கழகங்கள் செய்து வருகின்றன.
அதில், திருப்பூர் கம்பன் கழகம், தனது, 16வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. வரும், 28ம் தேதி கம்பன் விழா நடத்துகிறது. இதையொட்டி, மாணவ, மாணவியர் மற்றும், ஆசிரியர்கள் மத்தியில் பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டது.
திருப்பூர் கம்பன் கழக அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
திருப்பூர் கம்பன் கழகத்தை, மக்கள் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், 15 ஆண்டுகளுக்கு முன் துவக்கி வைத்தார். எதிர்கால இளைஞர்கள் மத்தியில் கம்பனை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதே அமைப்பின் நோக்கம்.
சினிமா, மொபைல் போன், இணையதளம் போன்றவற்றின் தாக்கத்தால், மேற்கத்திய கலாசாரம், மேலோங்கி வருகிறது. சினிமாவில் ஆபாசம், வன்முறை ஆகியவை அதிகளவில் காண்பிக்கப்படுகின்றன; இது, இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தையும், மோசமான மனநிலையையும் ஏற்படுத்துகிறது.
பொழுதுபோக்கில் கூட அறம், ஒழுக்கத்தை போதித்தவன் கம்பன். 12ம் நுாற்றாண்டிலேயே காதல், வீரம், அன்பு, பண்பு போன்றவற்றை இலக்கிய நயம் கலந்து பாடினான். அனைத்து இன்பங்களிலும் ஒழுக்கமும், அறமும் நிறைந்திருக்க வேண்டும் என்பதை, வலியுறுத்தினான்.
ஒவ்வொரு இளைஞர், இளம் பெண்களும் தங்களை தாங்களே 'ஹீரோ'வாக, கருத வேண்டும் என்பதை தான், கம்பனின் பாடல்கள் வலியுறுத்துகின்றன. கம்பராமயாணம் என்பது, வாழ்க்கைக்கான காவியம். இளைய தலைமுறையினர் மத்தியில் அவற்றை கொண்டு சென்று சேர்க்கிறோம். கம்பனின் இலக்கிய அறத்தை மாணவர்கள் உள்வாங்கிக் கொள்கின்றனர் என்பதையும் உணர்கிறோம்.
இதுவரை ஒரு லட்சம் மாணவ, மாணவியரிடம் கம்பனை பற்றி சொல்லியுள்ளோம். இலக்கிய இன்பத்தில் அறமும், ஒழுக்கமும் இருக்க வேண்டும் என்ற கம்பனின் போதனையை பின்பற்றினால், ஆபாசமும், வன்முறையும் இருக்காது. கம்பனின் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட மாணவர்கள் இதுபோன்ற நல்லொழுக்கத்தை பெறுகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இலக்கிய இன்பத்தில் அறமும், ஒழுக்கமும் இருக்க வேண்டும் என்ற கம்பனின் போதனையை பின்பற்றினால், ஆபாசமும், வன்முறையும் இருக்காது