/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜூனியர்களுக்கு சீனியர்களின் மரியாதை... இதுவே, ஒற்றுமைக்கான ஒரு விதை ஜூனியர்களுக்கு சீனியர்களின் மரியாதை... இதுவே, ஒற்றுமைக்கான ஒரு விதை
ஜூனியர்களுக்கு சீனியர்களின் மரியாதை... இதுவே, ஒற்றுமைக்கான ஒரு விதை
ஜூனியர்களுக்கு சீனியர்களின் மரியாதை... இதுவே, ஒற்றுமைக்கான ஒரு விதை
ஜூனியர்களுக்கு சீனியர்களின் மரியாதை... இதுவே, ஒற்றுமைக்கான ஒரு விதை
ADDED : ஜூலை 20, 2024 11:16 PM

''பிளஸ் 2 முடிச்சாச்சு. அடுத்து காலேஜ் தான்...'' இந்த வார்த்தையை கேட்டதும், வயிற்றில் புளியை கரைத்தது போல் உணர்வார்கள் சிலர். அதற்கு காரணம் ஒரு காலத்தில் கல்லுாரி என்றாலே 'கலாட்டா' என்பதாக தான் இருந்தது.
அதிலும், முதல் ஆண்டு மாணவ, மாணவியரை, 'ரேகிங்' என்ற பெயரில், சீனியர்கள் சீண்டுவதும், சில நேரங்களில் அதுஎல்லை மீறுவதும் வாடிக்கையாக இருந்தது. இதற்கு பயந்தே கல்லுாரி வாசலில் காலடி எடுத்து வைக்க தயங்கிய மாணவ, மாணவியரும் இருக்கத்தான் செய்கின்றனர். விளைவாக, ஒரு கட்டத்தில் 'ரேகிங்' செய்ய, அரசே தடை விதித்தது.
தற்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. 'சீனியர்' என கெத்து காண்பித்துக் கொண்டிருந்த மாணவ, மாணவியர் தற்போது, ஜூனியர்களை சீரும் சிறப்புமாக கல்லுரிக்கு வரவேற்கின்றனர். நாள் முழுக்க கலை நிகழ்ச்சிகள், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என, முதல் ஆண்டு மாணவ, மாணவியருக்கு உற்சாகம் ஊட்டுகின்றனர்; தன்னம்பிக்கையை வளர்த்து விடுகின்றனர்.
திருப்பூர் குமரன் மகளிர் கல்லுரியில் முதலாம் ஆண்டு மாணவியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. சீனியர் மாணவியர், நடனம், நாட்டியம், நாடகம் என தங்களின் ஒட்டுமொத்த கலைத்திறமையையும், ஜூனியர் மாணவிகளுக்காக அரங்கேற்றினர். கல்லுாரி வாசலில் காலடி வைத்த மாணவிகளை, பூங்கொத்து கொடுத்து, இன்முகத்துடன் வரவேற்றனர். இதனால், சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடின்றி, 'மாணவியர்' என்ற ஒற்றை அடையாளத்துடன், உறவுகளாக சங்கமித்தனர்.
கல்லுாரி முதல்வர் வசந்தி கூறுகையில்,''கல்லுாரியில் புதிதாக இணையும் மாணவியர், இரண்டாம், 3ம் ஆண்டு மாணவிகளுடன் நட்புறவுடன் பழக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது; ஏற்றத்தாழ்வு மறைகிறது. சீனியர் மாணவியரின் அனுபவங்களை அறிந்துக் கொள்வதன் வாயிலாக, கல்லுாரி அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும். கல்லுாரி காலங்களை மகிழ்வானதாக மாற்றிக் கொள்ள முடியும்; கல்லுாரி கல்வி குறித்த ஒரு தெளிவு கிடைக்கும்'' என்றார்.
''முதலாம் ஆண்டு மாணவியருக்கு, அரசின் வழிகாட்டுதல் படி, 10 நாள் அறிமுக வகுப்பு நடத்தியுள்ளோம். கல்லுாரி நடைமுறை, விதிகள் குறித்து, அவர்களது பெற்றோருக்கும் தெளிவுப்படுத்தியுள்ளோம். கல்லுாரி படிப்பு என்பது மாணவிகளுக்கு அச்சுறுத்தலாகவோ, கடினமானதாகவோ இருக்கும் என்ற எண்ணம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. மாணவியர் ஆர்வமுடன் கல்லுாரிக்கு வந்து செல்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது,'' என்கிறார், கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ்.
தற்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. 'சீனியர்' என கெத்து காண்பித்துக் கொண்டிருந்த மாணவ, மாணவியர் தற்போது, ஜூனியர்களை சீரும் சிறப்புமாக கல்லுரிக்கு வரவேற்கின்றனர்