/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுப்பராயன் பெற்ற ஓட்டுகள் கடந்த முறை 45.52 சதவீதம்; இந்த முறை 41.38 சதவீதம் சுப்பராயன் பெற்ற ஓட்டுகள் கடந்த முறை 45.52 சதவீதம்; இந்த முறை 41.38 சதவீதம்
சுப்பராயன் பெற்ற ஓட்டுகள் கடந்த முறை 45.52 சதவீதம்; இந்த முறை 41.38 சதவீதம்
சுப்பராயன் பெற்ற ஓட்டுகள் கடந்த முறை 45.52 சதவீதம்; இந்த முறை 41.38 சதவீதம்
சுப்பராயன் பெற்ற ஓட்டுகள் கடந்த முறை 45.52 சதவீதம்; இந்த முறை 41.38 சதவீதம்
ADDED : ஜூன் 05, 2024 10:35 PM
திருப்பூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சுப்பராயனுக்கு, கடந்த 2019 லோக்சபா தேர்தலைவிட, 4 சதவீத ஓட்டுகள் சரிந்துள்ளது.
திருப்பூர் வடக்கு, தெற்கு, அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் லோக்சபா தொகுதி, கடந்த 2009ல் உருவாக்கப்பட்டது.
தொகுதி உருவாக்கப்பட்டபின் நடந்த முதல் இரண்டு தேர்தல்களில், அ.தி.மு.க., வெற்றியை வசப்படுத்தியிருந்தது. 2009 தேர்தலில் அ.தி.மு.க., சிவசாமியும், 2014ல் சத்தியபாமாவும் வெற்றி பெற்றனர்.
கடந்த 2019 தேர்தலில் போட்டியிட்ட இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.,வின் ஆனந்தனைவிட, 93 ஆயிரத்து 368 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
'சிட்டிங்' எம்.பி., சுப்பராயன், தற்போதைய லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில் மீண்டும் களமிறங்கினார். இந்த தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளரைவிட, 1 லட்சத்து 25 ஆயிரத்து 927 ஓட்டுக்கள் அதிகம் பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் எம்.பி.,யாகியுள்ளார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலைவிட, தற்போது, கூடுதல் ஓட்டு வித்தியாசத்தில் சுப்பராயன் வெற்றிபெற்றுள்ளார்.
அதேநேரம், முந்தைய தேர்தலைவிட, தற்போதைய லோக்சபா தேர்தலில், சுப்பராயனின் ஓட்டு விகிதத்தில், 4 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மொத்தம் 11 லட்சத்து 20 ஆயிரத்து 93 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. இதில், 45.42 சதவீதம் அதாவது, 5 லட்சத்து 8 ஆயிரத்து 725 ஓட்டுக்கள் சுப்பராயனுக்கு கிடைத்திருந்தது.
இந்த தேர்தலில், மொத்தம் 11 லட்சத்து 43 ஆயிரத்து 624 ஓட்டுகள் பதிவாகின. நோட்டா, செல்லாத ஓட்டுக்கள் நீங்கலாக, 11 லட்சத்து 42 ஆயிரத்து 549 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதில், சுப்பராயன் பெற்றுள்ள 4 லட்சத்து 27 ஆயரத்து 39 ஓட்டு என்பது, 41.38 சதவீதமாகும்.