Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வெற்றி தந்தது எண்ணங்களா... எண்ணிக்கையா! வெற்றி தந்தது

வெற்றி தந்தது எண்ணங்களா... எண்ணிக்கையா! வெற்றி தந்தது

வெற்றி தந்தது எண்ணங்களா... எண்ணிக்கையா! வெற்றி தந்தது

வெற்றி தந்தது எண்ணங்களா... எண்ணிக்கையா! வெற்றி தந்தது

ADDED : ஜூன் 05, 2024 10:34 PM


Google News
மீண்டும் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட சுப்பராயன், இம்முறை தொகுதியின் வளர்ச்சிக்காக தன் அர்ப்பணிப்பை முழுமையாகச் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, வாக்காளர் மத்தியில் எழுந்துள்ளது.

திருப்பூர் தொகுதி வேட்பாளராக இந்திய கம்யூ., கட்சியின் சுப்பராயன் அறிவிக்கப்பட்ட மறுநிமிடமே, அவர் மீதான விமர்சனக் கணைகள் பாய்ந்தன. 'தொகுதிக்கு பெரிதாக அவர் எதுவும் செய்யவில்லை; தொகுதி மக்களை சந்திப்பதில்லை; தொகுதிக்குள் தலைகாட்டுவதே இல்லை. கட்சி விதிமுறைகளை மீறி தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். முதல்வர் ஸ்டாலினிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, 'சீட்' வாங்கி விட்டார்' என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் தாண்டி, 'மண்ணின் மைந்தர்கள் கூட்டமைப்பு' என்ற பெயரில் வெளியான போஸ்டரில், 'திருப்பூர் எம்.பி., தொகுதிக்கு செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினால், 1 கோடி பரிசு' என்ற போஸ்டர் நகரெங்கும் ஒட்டப்பட்டது; இது, அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனை விமர்சனங்களையும் கடந்து, நடந்து முடிந்த தேர்தலில் சுப்பராயன் மீண்டும் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

யதார்த்த அரசியல் கணக்கு


அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில், தொகுதி எம்.பி.,க்கள் மீது மக்கள் அதிருப்தியில் இருந்தாலும், அந்த தொகுதியில் அவர்களே வெற்றி பெற்றுள்ளனர். திருப்பூர் தொகுதியில், மொத்த வாக்காளர் எண்ணிக்கை, 16.08 லட்சம் ஓட்டு; இதில், பதிவானவை, 11.35 லட்சம் ஓட்டு. இது, 70.62 சதவீதம். வெற்றி பெற்ற வேட்பாளர் சுப்பராயன் பெற்ற ஓட்டு, 4.72 லட்சம். மொத்தம் பதிவான ஓட்டுகளில், இது, 41.38 சதவீதம்.

இவருக்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க., - 3.46 லட்சம் ஓட்டு; பா.ஜ.,- 1.85 லட்சம் ஓட்டு, நாம் தமிழர் கட்சி - 95,726 ஓட்டு; நோட்டா - 17,737 ஓட்டு என, 6.45 லட்சம் ஓட்டுகள் பிரிந்துள்ளது. இதுதவிர, மொத்த ஓட்டுகளில், 5 லட்சம் ஓட்டுகள் பல்வேறு காரணங்களால் பதிவாகவில்லை.

சுருக்கமாக சொல்லப் போனால், திருப்பூர் தொகுதியின் ஒட்டு மொத்த வாக்காளர் எண்ணிக்கையான, 16 லட்சத்தில், 4.72 லட்சம் ஓட்டுகளை பெற்ற வேட்பாளர் தான் எம்.பி.,யாக செயலாற்ற உள்ளார். இதே நிலை தான் பெரும்பாலான தொகுதிகளில் நிலவுகிறது.

வெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற ஓட்டு, பெரும்பான்மை வாக்காளர்களின் எண்ணங்கள் அடிப்படையில் கிடைத்த ஓட்டு என்பதை காட்டிலும், அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி உள்ளிட்ட எண்ணிக்கை அடிப்படையிலான ஓட்டு என்பதே சரி. இந்த யதார்த்த அரசியல் கணக்கை புரிந்து, சுப்பராயன் செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

வெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற ஓட்டு, பெரும்பான்மை வாக்காளர்களின் எண்ணங்கள் அடிப்படையில் கிடைத்த ஓட்டு என்பதை காட்டிலும், அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி உள்ளிட்ட எண்ணிக்கை அடிப்படையிலான ஓட்டு என்பதே சரி. இந்த யதார்த்த அரசியலை புரிந்து, சுப்பராயன்செயலாற்ற

வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us