/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பள்ளியில் மாணவர் தேர்தல் 2 அணிகளாக போட்டி பள்ளியில் மாணவர் தேர்தல் 2 அணிகளாக போட்டி
பள்ளியில் மாணவர் தேர்தல் 2 அணிகளாக போட்டி
பள்ளியில் மாணவர் தேர்தல் 2 அணிகளாக போட்டி
பள்ளியில் மாணவர் தேர்தல் 2 அணிகளாக போட்டி
ADDED : ஜூன் 29, 2024 12:39 AM

உடுமலை;உடுமலை ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் நடந்தது.
உடுமலை, ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளியில் மாணவர் தலைவர் மற்றும் செயலாளருக்கான விண்ணப்பங்கள் தேர்தல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தேர்தலுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர் முன்னேற்ற கழகம், மாணவர் அறிவுத்திறனுாட்டல் கழகம் என இரண்டு அணிகளாக மாணவர்கள் பங்கேற்று தனிச் சின்னங்களோடு போட்டியிட்டனர். தேர்தலில் போட்டியிட்ட மாணவர்கள் விவாத மேடை மூலமாக தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.
தேர்தல் நாளில் மாணவர்கள் தங்களின் சின்னத்தை தேர்ந்தெடுத்து ஓட்டுப்பதிவு செய்தனர். தேர்தலின் அடையாளமாக அவர்களுக்கு விரலில் மையிடப்பட்டது.
தேர்தல் விழாவில், பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் சகுந்தலா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.