/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஒரு கால்வாய்; ஓராயிரம் பிரச்னைகள் பாசன மேம்பாட்டுக்கு அக்கறையில்லை விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வே இல்லை ஒரு கால்வாய்; ஓராயிரம் பிரச்னைகள் பாசன மேம்பாட்டுக்கு அக்கறையில்லை விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வே இல்லை
ஒரு கால்வாய்; ஓராயிரம் பிரச்னைகள் பாசன மேம்பாட்டுக்கு அக்கறையில்லை விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வே இல்லை
ஒரு கால்வாய்; ஓராயிரம் பிரச்னைகள் பாசன மேம்பாட்டுக்கு அக்கறையில்லை விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வே இல்லை
ஒரு கால்வாய்; ஓராயிரம் பிரச்னைகள் பாசன மேம்பாட்டுக்கு அக்கறையில்லை விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வே இல்லை
ADDED : ஜூன் 29, 2024 12:40 AM

உடுமலை;பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் பாசன ஆதாரமான கால்வாய், குப்பை கிடங்காகவும், கரைகள் சேதமடைந்து, பரிதாப நிலைக்கு மாறியும், பொதுப்பணித்துறையும், தமிழக அரசும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவில்லை. கால்வாய் நிலையால் விவசாயிகள் விரக்தி நிலையில் உள்ளனர்.
பி.ஏ.பி., பாசன திட்டத்தில், உடுமலை கால்வாய் வாயிலாக 58 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருமூர்த்தி அணையிலிருந்து நான்கு மண்டலங்களிலும், இந்த கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்வாய், பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களின் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாகவும் உள்ளது. திருமூர்த்தி அணை அருகே துவங்கும் இக்கால்வாய், தாராபுரம் தாலுகா வரை, 38.12 கி.மீ., துாரத்துக்கு அமைந்துள்ளது.
கழிவுகளால் கலக்கம்
உடுமலை கால்வாய் நகர எல்லை அருகிலும், 25க்கும் அதிகமான கிராமங்களை ஒட்டியும் செல்கிறது. இந்த கால்வாயில் மட்டும், 23 இடங்களில், தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
ஜல்லிபட்டி, பள்ளபாளையம், போடிபட்டி, கணக்கம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளின் பகுதியில், அனைத்து வகை கழிவுகளும் நேரடியாக கால்வாயில் கொட்டப்படுகிறது. மேலும், சில ஊராட்சிகளின் குப்பை கிடங்கும் கரையில் உள்ளது. கிடங்கில் இருந்து அனைத்து வகை கழிவுகளும் நேரடியாக பாசன நீரில் விழுகிறது.
பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் போது, கழிவுகள் நேரடியாக விளைநிலங்களுக்கு அடித்து செல்லப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளும், கண்ணாடி பாட்டில்களும் விளைநிலங்களில், தேங்கி மண் வளம் பாதிப்பதுடன், விவசாயிகளையும், காயமடைய செய்கிறது.
ஒவ்வொரு மண்டல பாசனத்தின் போதும், பல டன் கழிவுகள், ஷட்டர் பகுதியில், தேங்குகிறது. விவசாயிகள் போராடி அக்கழிவுகளை அகற்றுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, கால்வாய் கரையிலுள்ள ஊராட்சிகளின் குப்பை கிடங்குகளை இடம் மாற்ற வேண்டும்; அதிக கழிவுகள் கொட்டப்படும் பகுதியில் கம்பி வேலி தேவை என பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
நுாற்றுக்கணக்கான முறை, கோட்ட அளவிலான குறை தீர் கூட்டத்தில் இப்பிரச்னை குறித்து விவசாயிகள் பேசியும் எவ்வித பலனும் இல்லை.
கரையெல்லாம் சேதம்
மண்டல பாசனத்தில், தண்ணீர் சுற்றுகள் குறையும் போது, மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகளுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே உடுமலை கால்வாயில், நீர் விரயத்தை தவிர்க்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது.
ஆனால், கால்வாய் கரை பல இடங்களில் சேதமடைந்து, பரிதாப நிலையில் உள்ளது. கான்கிரீட் சிலாப்கள் உடைந்து மண் கரையாக பல இடங்களில் மாறி, நீர் விரயம் அதிகரித்துள்ளது.
தண்ணீர் திருட்டும் நடப்பதால், கடைமடை பகுதி விவசாயிகள் பாதிக்கின்றனர். கால்வாயை முழுமையாக புதுப்பிக்க வேண்டும்; பொதுப்பணித்துறை வாயிலாக சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.
வேளாண்மை, நீராதாரங்கள் மேம்பாட்டில் அதிக அக்கறை காட்டுவதாக தெரிவிக்கும் அரசு, ஒரு பாசன கால்வாய், சாக்கடை கால்வாயாக மாறி வரும் அவல நிலையை கண்டுகொள்ளவில்லை. திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் இப்பிரச்னைக்கு அக்கறை காட்டவில்லை.
இதே நிலை நீடித்தால், பாசன பகுதியில், விளைநிலங்கள் தரிசாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது. இனியாவது உடுமலை கால்வாயில் நிலவும் பிரச்னைக்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.