/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு ஒன்றிய குழு கூட்டத்தில் முடிவு அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு ஒன்றிய குழு கூட்டத்தில் முடிவு
அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு ஒன்றிய குழு கூட்டத்தில் முடிவு
அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு ஒன்றிய குழு கூட்டத்தில் முடிவு
அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு ஒன்றிய குழு கூட்டத்தில் முடிவு
ADDED : ஜூன் 29, 2024 12:36 AM
உடுமலை:உடுமலையில், அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பதற்காக பணிகள் மேற்கொள்ள, ஒன்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்று முதல் 5வயது வரை உள்ள குழந்தைகள் கல்வி பயிலும் வகையில், அரசு சார்பில் அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு, அங்கு கல்வியோடு, சத்துள்ள உணவுகளும் வழங்கப்படுகின்றன.
இவற்றை மேம்படுத்த வேண்டும் என, பெற்றோர், மற்றும் பணியாளர்கள் அரசை நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
இந்நிலையில், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில், அங்கன்வாடி மையங்களை பராமரிப்பதற்கு பெற்றோர் தரப்பிலும், அங்கன்வாடி மையத்தினரும், உள்ளாட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதன் அடிப்படையில், ஒன்றியக்குழு கூட்டத்தில், கிராமப்பகுதி அங்கன்வாடி மையங்களை பராமரிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பதினைந்தாவது நிதிக்குழு மானியம் திட்டத்தில், அங்கன்வாடிகளில் பராமரிப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானம் வைக்கப்பட்டது.
ஜல்லிபட்டி ஊராட்சிக்குட்பட்ட ஓனாக்கல்லுார், அம்மாபட்டி, ஜல்லிபட்டி கிராமங்களின் அங்கன்வாடி மையங்களை பராமரிப்பதற்கு, தலா இரண்டு லட்சம் ரூபாய், ராகல்பாவி ஊராட்சியில் சின்னபூலாங்கிணர் அங்கன்வாடி மையப்பணிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய்,
கணபதிபாளையம், கொடிங்கியம் ஊராட்சிக்குட்பட்ட கே.வல்லக்குண்டாபுரம் மையங்களின் பணிகளுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய், கல்லாபுரத்தில் உள்ள வேல்நகர் பகுதி அங்கன்வாடி மையப்பணிகளுக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்,
ஆண்டியகவுண்டனுார் ஊராட்சிக்குட்பட்ட உரல்பட்டி மையத்துக்கு, ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய், ஜல்லிபட்டி ஊராட்சிக்குட்பட்ட தினைக்குளம் அங்கன்வாடி மையத்துக்கு, ஒரு லட்ச ரூபாய்,
பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட செல்லம் குடியிருப்பு பகுதி அங்கன்வாடி மையம் பராமரிக்க, ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய், பெரியகோட்டை மையப்பணிகளுக்கு, ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 184 ரூபாயும்,
ஆண்டியகவுண்டனுார் ஊராட்சிக்குட்பட்ட குட்டையகவுண்டனுார் அங்கன்வாடி மையப்பணிகளுக்கு, ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயும் என மொத்தமாக, 18 லட்சத்து 82 ஆயிரத்து 386 ரூபாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விரைவில் நிதிஒதுக்கீடு செய்வதற்கும், பணிகளை தீவிரப்படுத்தவும் அங்கன்வாடி பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.