எல்லை பிரச்னையால் தேங்கும் குப்பை
எல்லை பிரச்னையால் தேங்கும் குப்பை
எல்லை பிரச்னையால் தேங்கும் குப்பை
ADDED : ஜூன் 29, 2024 12:02 AM

உடுமலை:உடுமலை நகராட்சி காந்திநகர் மற்றும் பெரிய கோட்டை ஊராட்சி எல்லையாக, மலையாண்டி லே -அவுட், விநாயகர் கோவில், போலீஸ் செக்போஸ்ட் ஆகியவை உள்ளது.
நகராட்சி மற்றும் ஊராட்சி எல்லையாக உள்ள இப்பகுதியில், குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், கடும் சுகாதார கேடு ஏற்படுகிறது.
மேலும், குப்பைக்கு தீ வைத்து எரிக்கப்படுவதால், புகை மூட்டமாக மாறி வருகிறது. சுற்றிலும் குடியிருப்புகள், தனியார் பள்ளி, புற்றுக்கோவில், விநாயகர் கோவில் உள்ள நிலையில், இப்பகுதி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் மையமாகவும் உள்ளது.
எல்லையாக உள்ளதால், நகராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் இப்பகுதியில் குப்பை கொட்டி வருகின்றனர். இதனை அகற்றுவதிலும், இரு அமைப்புகளும் அலட்சியம் காட்டி வருவதால், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.