/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அச்சுறுத்தும் மேல்நிலைத்தொட்டி இடித்து அகற்ற வலியுறுத்தல் அச்சுறுத்தும் மேல்நிலைத்தொட்டி இடித்து அகற்ற வலியுறுத்தல்
அச்சுறுத்தும் மேல்நிலைத்தொட்டி இடித்து அகற்ற வலியுறுத்தல்
அச்சுறுத்தும் மேல்நிலைத்தொட்டி இடித்து அகற்ற வலியுறுத்தல்
அச்சுறுத்தும் மேல்நிலைத்தொட்டி இடித்து அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூன் 28, 2024 11:59 PM
உடுமலை:இடியும் நிலையிலுள்ள மேல்நிலைத்தொட்டியை அப்புறப்படுத்தி, புதிய தொட்டி கட்ட பழையூர் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் பழையூர். கிராமத்துக்கு, திருமூர்த்தி அணை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
முன்பு, போர்வெல் உள்ளிட்ட உள்ளூர் நீராதாரங்கள் வாயிலாக குடிநீர் வினியோகிக்க, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது. கடந்த, 2012-13ல் கட்டப்பட்ட இந்த மேல்நிலைத்தொட்டி தற்போது உறுதியிழந்து, இடியும் நிலையில் காணப்படுகிறது.
தொட்டியில் ஆங்காங்கே, கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, துாண்களும் விரிசல் விட்டு, எந்நேரத்திலும் இடிந்து விடும் அபாயத்தில் உள்ளது. தற்போதும், இந்த மேல்நிலைத்தொட்டியில், தண்ணீர் ஏற்றி வினியோகித்து வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், '2013ல் பயன்பாட்டுக்கு வந்த மேல்நிலைத்தொட்டி, பத்தாண்டுகள் கூட பயன்பாட்டில் இல்லாமல், இடியும் நிலையில் காணப்படுகிறது. இந்த தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக மேல்நிலைத்தொட்டி கட்ட வேண்டும். இல்லாவிட்டால், கிராம குடிநீர் வினியோகத்தில், சிக்கல் ஏற்படும்,' என்றனர்.