ADDED : ஜூன் 12, 2024 12:30 AM
திருப்பூர்;ஊத்துக்குளி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சியில் முகாசி, பல்லகவுண்டன்பாளையம்,எம்.தொட்டிபாளையம் உள்ளிட்ட பல ஊர்கள் உள்ளது. இப்பகுதிகளில், 45 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
எனவே, குடிநீர் வினியோகத்தை சீர்படுத்த வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள நடுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். ஆற்று குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின், அனைவரும் கலைந்து சென்றனர்.