/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வீட்டின் மேல் விழும் கற்கள்: காங்கயம் தாசில்தார் ஆய்வு வீட்டின் மேல் விழும் கற்கள்: காங்கயம் தாசில்தார் ஆய்வு
வீட்டின் மேல் விழும் கற்கள்: காங்கயம் தாசில்தார் ஆய்வு
வீட்டின் மேல் விழும் கற்கள்: காங்கயம் தாசில்தார் ஆய்வு
வீட்டின் மேல் விழும் கற்கள்: காங்கயம் தாசில்தார் ஆய்வு
ADDED : ஜூலை 09, 2024 11:02 PM
திருப்பூர்;காங்கயம், படியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள வீடுகளின் மீது, இரு வாரங்களாக, இரவு, 7:00 முதல் நள்ளிரவு, 1:00 மணி வரை தொடர்ந்து கற்கள் விழுந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் கோவிலில் தஞ்சமடைந்தனர். இதனால், காங்கயம் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். கிராமம் முழுவதும் 'சிசிடிவி' கேமரா, போக்கஸ் லைட் ஆகியவற்றை அமைத்தனர். கிரேன் உதவியுடன் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ட்ரோன் கேமரா மூலமாக தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இதையறிந்த காங்கயம் தாசில்தார் மயில்சாமி, நேற்று ஒட்டப்பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மக்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.