/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மண் பரிசோதனை முகாம்; விவசாயிகளுக்கு அழைப்பு மண் பரிசோதனை முகாம்; விவசாயிகளுக்கு அழைப்பு
மண் பரிசோதனை முகாம்; விவசாயிகளுக்கு அழைப்பு
மண் பரிசோதனை முகாம்; விவசாயிகளுக்கு அழைப்பு
மண் பரிசோதனை முகாம்; விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 10, 2024 10:18 PM
உடுமலை : உடுமலை வேளாண் துறை சார்பில், பல்லடம் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் வாயிலாக, வாளவாடி கிராமத்தில் மண்பரிசோதனை முகாம் நடந்தது.
இம்முகாமின் அடிப்படையில், மண் மாதிரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு மண் ஆய்வு முடிவுகளும், பயிர்களுக்கு ஏற்ற உரப்பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளது.
வாளவாடி பகுதியில், சேகரிக்கப்பட்ட மண் ஆய்வு அடிப்படையில், பொதுவாக அனைத்து மண் வகைகளிலும் பயிர் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணூட்டச்சத்துக்கள் அளவு சராசரி அளவைவிட மிகக் குறைவாகவே உள்ளது.
எனவே, விவசாயிகள், தங்கள் பயிர்களுக்கு பேரூட்ட சத்துகள் வழங்குவதுடன், கூடவே நுண்ணுாட்ட சத்துக்களும், வழங்க வேண்டியது அவசியமாகிறது.
இவ்வாறு செய்தால் மட்டுமே, பயிரின் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணுாட்டச் சத்துக்கள் உடனடியாக கிடைத்து பயிரின் மகசூல் திறன் அதிகரிக்கும். மேலும் மண்ணின் வளம் பாதுகாக்கப்படும்.
அனைத்து பயிர்களுக்கும் தேவையான நுண்ணுாட்டச்சத்து உரங்கள், சாளையூர் துணை வேளாண்மை கிடங்கில், தேவையான அளவு நுண்ணுாட்ட உரங்கள் இருப்பு உள்ளது. மானிய விலையில் விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபரங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலர்கள், வைரமுத்து - 98659 39222; மார்க்கண்டன் 98949 36328 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.