/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சர்தார் படேல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் சர்தார் படேல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சர்தார் படேல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சர்தார் படேல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சர்தார் படேல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 10, 2024 10:18 PM
உடுமலை : தேசிய ஒற்றுமைக்கான சர்தார் படேல் விருதுக்கு வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய ஒற்றுமைக்கான சர்தார் படேல் விருது வழங்கிவருகிறது.
நடப்பு ஆண்டுக்கான விருது, தேசிய ஒற்றுமை தினமான அக்., 31ம் தேதி வழங்கப்பட உள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் ஒமைப்பாட்டை மேம்படுத்துவதற்காக பங்களிப்பு செலுத்தியோர், இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். www.awards.gov.in என்கிற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை பெறலாம்.
தகுதியுள்ளோர், உரிய ஆவணங்களுடன், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாக தரைதளத்தில் செயல்படும், சமூக நல அலுவலகத்தில், வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதற்கு தகுதியுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.