/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குழந்தை திருமணம் தடுப்பு சிறப்பு கருத்தரங்கம் குழந்தை திருமணம் தடுப்பு சிறப்பு கருத்தரங்கம்
குழந்தை திருமணம் தடுப்பு சிறப்பு கருத்தரங்கம்
குழந்தை திருமணம் தடுப்பு சிறப்பு கருத்தரங்கம்
குழந்தை திருமணம் தடுப்பு சிறப்பு கருத்தரங்கம்
ADDED : ஜூலை 10, 2024 10:18 PM
உடுமலை : உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், குழந்தை திருமணம் தடுப்பு குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் ஒரு நிகழ்வாக, குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து கருத்தரங்கம் நடந்தது.
பேராசிரியர் திருமூர்த்தி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார். உடுமலை மனவளக்கலை மன்றத்தின் சார்பில், மாணவர்களுக்கு காயகல்பப்பயிற்சி வழங்கப்பட்டது.
முள்ளுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் தர்மராஜ், 'தன்னம்பிக்கை ' என்ற தலைப்பில் பேசினார்.
மாவட்ட சமூக நலத்துறை மூத்த ஆலோசகர் ஜெபிலாமேரிதங்கம், குழந்தை திருமணங்களால் ஏற்படும் விளைவுகள், தடுக்கும் முறைகள், நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். கணிதவியல் துறை பேராசிரியர் முகமதுஅலிஜாபர் நன்றி தெரிவித்தார்.