/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மே 2ம் தேதி முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் மே 2ம் தேதி முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்
மே 2ம் தேதி முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்
மே 2ம் தேதி முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்
மே 2ம் தேதி முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்
ADDED : மார் 12, 2025 12:30 AM
திருப்பூர்; ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஐந்து கட்ட போராட்டங்களை ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில், தனித்துறை ஊதிய நிர்ணயம், பி.ஓ.எஸ்., கருவியுடன் எலக்ட்ரானிக் தராசு இணைப்பில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, ஐந்து கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும், 17ம் தேதி, அனைத்து மாவட்டங்களில் குறைகேட்பு நாள் கூட்டத்தில் கலெக்டர்களிடம் கோரிக்கை மனு அளிப்பது.
இரண்டாவது கட்டமாக, 24ம் தேதி, கோரிக்கைகள் குறித்த பேட்ஜ் அணிந்தும், கருப்பு உடை அணிந்தும் பணியாற்றுவது, மூன்றாவது கட்டமாக ஏப்., 3ம் தேதி, கடைகளில், 5 கார்டுகளுக்கு மட்டுமே பொருள் வழங்குவது நான்காவது கட்டமாக ஏப்., 11ம் தேதி, அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நான்கு கட்ட போராட்டங்களிலும் எந்த தீர்வும் ஏற்படாவிட்டால், மே மாதம், 2ம் தேதி முதல், கடைகளில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபடுவர்.
ரேஷன் கடைகள் திறந்திருக்கும் பொருட்கள் வழங்கப்படாது. இந்த போராட்ட முடிவுகள் குறித்து, அரசு துறை அலுவலர்கள், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.