/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நாய் கடித்து பலியான கால்நடைக்கு எடையளவில் இழப்பீடு வேண்டும் நாய் கடித்து பலியான கால்நடைக்கு எடையளவில் இழப்பீடு வேண்டும்
நாய் கடித்து பலியான கால்நடைக்கு எடையளவில் இழப்பீடு வேண்டும்
நாய் கடித்து பலியான கால்நடைக்கு எடையளவில் இழப்பீடு வேண்டும்
நாய் கடித்து பலியான கால்நடைக்கு எடையளவில் இழப்பீடு வேண்டும்
ADDED : மார் 12, 2025 12:30 AM
பொங்கலுார்: வெறி நாய் கடித்து இறந்த ஆடுகளுக்கு கிலோவுக்கு, 500 ரூபாய் உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக, தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஏழு மாதங்களில் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் வெறி நாய் கடித்து இறந்துள்ளன. நாய்களை உள்ளாட்சி நிர்வாகங்கள் சரியாக கட்டுப்படுத்தாததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் சாமிநாதன் தலைமைச் செயலாளர் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
பேரிடர் நிவாரண இழப்பீடு கோழிகளுக்கு - 100 ரூபாய், ஆடுகளுக்கு, 4 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சரியான இழப்பீடு அல்ல. அமைச்சரின் இந்தப் பரிந்துரை விவசாயிகளிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனை, அமைச்சர் மறு ஆய்வு செய்து தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள மேற்கண்ட கடிதத்தை திரும்பப்பெற்று, இறந்த ஆடு, கோழிகளுக்கு எடை அடிப்படையில் கிலோவுக்கு, 500 ரூபாய் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் இழப்பீடு வழங்கும் வகையில் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.