பள்ளிகள் செல்லும் ரோடு பரிதாபகரம்
பள்ளிகள் செல்லும் ரோடு பரிதாபகரம்
பள்ளிகள் செல்லும் ரோடு பரிதாபகரம்
ADDED : ஜூன் 08, 2024 12:58 AM

திருப்பூர்;பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்பட உள்ள நிலையில், கே.எஸ்.சி., பள்ளி வீதி குண்டும் குழியுமாக கிடப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் - தாராபுரம் ரோட்டையும், ஈஸ்வரன் கோவில் ரோட்டையும் இணைக்கும் வகையில், கே.எஸ்.சி., பள்ளி ரோடு அமைந்துள்ளது. ஏராளமான கடைகள் இங்கு அமைந்துள்ளன.
பல்வேறு குடியிருப்புகளுக்குச் செல்லும் வழித்த டமாக இந்த ரோடு உள்ளது.கே.எஸ்.சி., மேல்நிலைப் பள்ளி, பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளி, முத்துப்புதுார் நடுநிலைப் பள்ளி மற்றும் இரு தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் வழியாகவும் இந்த ரோடு உள்ளது.
ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக நொய்யலைக் கடந்து வரும் வாகனங்கள் பெரும்பாலும் இந்த ரோடு வழியாக தாராபுரம் ரோடு சென்று சேர்கிறது.
ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், டவுன் மாரியம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில் ஆகியவற்றுக்குச் செல்லும் பிரதான ரோடாகவும் இது உள்ளது.
இவற்றுக்குச் செல்லும் வாகனங்கள், வாடிக்கையாளர்கள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர் ஆயிரக்கணக்கில் இந்த ரோட்டில் சென்று வருகின்றனர். ரோடு அகலப்படுத்தப்பட்டு புதிதாக கடந்த இரு ஆண்டு முன் போடப்பட்டது.
தற்போது, குழாய் மற்றும் கேபிள் பதிப்பு பணிக்காக இந்த ரோடு கடைசி வரை தோண்டப்பட்டது. அதன் பின் அது முறையாக மூடி ரோடு போடவில்லை.குண்டும் குழியுமாக ரோடு முழுவதும் காட்சியளிக்கிறது. வாகனங்கள் குழிகளில் இறங்கி ஏறி, குலுக்கலுடன் செல்லும் நிலை உள்ளது.
நடந்து செல்வதில் கூட பெரும் சிரமம் நிலவுகிறது. இந்நிலையில், நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த வழியில் செல்வர். இதனால் பெரும் அவதி ஏற்படும். உடனடியாக இந்த ரோட்டை சீரமைக்க வேண்டியது கட்டாயம்.