ADDED : ஜூன் 08, 2024 12:56 AM
திருப்பூர்:மூலனுார், மூலப்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து. விவசாயி. இவரது வீட்டில் மர்ம நபர்கள்,10 சவரன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாயைத் திருடிச் சென்றனர். மூலனுார் போலீசார் விசாரித்தனர்.
தாராபுரம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, இருவர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் முத்துப்பட்டியைச் சேர்ந்த முத்துராமலிங்கம், 40; கீழ்துறையைச் சேர்ந்த அழகர்சாமி, 35 என்பதும், இருவரும் திருடியதும் தெரியவந்தது. பணம், நகை மீட்கப்பட்டது.