Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கட்டடம் அல்ல... கருணையின் கொடை புற்றுநோய் சிகிச்சை மையம் அடுத்தாண்டு முதல் செயல்பாடு

கட்டடம் அல்ல... கருணையின் கொடை புற்றுநோய் சிகிச்சை மையம் அடுத்தாண்டு முதல் செயல்பாடு

கட்டடம் அல்ல... கருணையின் கொடை புற்றுநோய் சிகிச்சை மையம் அடுத்தாண்டு முதல் செயல்பாடு

கட்டடம் அல்ல... கருணையின் கொடை புற்றுநோய் சிகிச்சை மையம் அடுத்தாண்டு முதல் செயல்பாடு

ADDED : ஜூன் 08, 2024 01:00 AM


Google News
Latest Tamil News
திருப்பூர், ஜூன் 8-

துயரங்கள் வரும்போதெல்லாம், திருப்பூர் மக்களின் கருணைக்கரம் நீளும். திருப்பூரில் உருவாகிவரும் புற்றுநோய் சிகிச்சை மையம், இந்தக் கருணை உள்ளங்களின் முன்முயற்சி. வரும் 2025 மார்ச்சுக்குள் இது பயன்பாட்டுக்கு வரும் வகையில், கட்டடப்பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகின்றன.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 'நமக்கு நாமே திட்டம்' மூலம் ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புற்றுநோய் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.

நவீன வசதிகள்


இந்திய அளவில் சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக இது அமைகிறது. கதிர்வீச்சு புற்று நோயியல் பிரிவு, உள் கதிர்வீச்சு மருத்துவம், மருத்துவ புற்று நோயியல் பிரிவு, அறுவை சிகிச்சை புற்று நோயியல் பிரிவு, அணு மருத்துவம், முழு உடல் பெட் சிடி ஸ்கேன், இருதய மருத்துவ கேத் லேப் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த மையம் அமைய உள்ளது. அதிநவீன கதிர்வீச்சு வழங்கும் கருவி, ரோபோடிக் சர்ஜரி உள்ளிட்ட அனைத்து வகை கருவிகளும் இடம்பெற உள்ளன. இதற்கான இயந்திரங்கள் அமெரிக்காவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

புற்று நோய்க்கு மருந்து- மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிப்பது, அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு என 3 விதங்கள் உண்டு. இவை அனைத்துக்கும் இங்கு சிகிச்சை பெற முடியும். அரசுக்கு பொதுமக்களின் பங்குத்தொகை மட்டும் 30 கோடி ரூபாய்.

முழுவீச்சு


சிகிச்சை மையம் கட்டும் பணி சுறுசுறுப்பாகியுள்ளது. அறுபது கோடி ரூபாய் மதிப்பிலான புற்றுநோய் மையத்துக்கு, கருத்துரு தயாரிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கட்டங்களாக நிதி திரட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து பலரும் நிதி வழங்கி வருகின்றனர். முதல்கட்ட பணிகளை துவங்குவதற்காக, மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த ஜன., 10ம் தேதி நடந்தது.

மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் மகப்பேறு சிசிச்சை பிரிவுக்கு பின், முதியோர் இலவச சிகிச்சை மற்றும் தங்குமிடத்துக்கு எதிரில், இந்த மையம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது.

'தற்போது ரெடிமேடு கற்கள் மூலம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டு இறுதிக்குள், 60 சதவீத பணி நிறைவு பெறும். 2025 மார்ச்சுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்,' என, மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us