/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
ADDED : ஜூலை 29, 2024 12:07 AM

திருப்பூர்;தாராபுரத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் ரேக்ளாவில் பூட்டிய காளைகள் சீறிப் பாய்ந்தன. கருணாநிதி நுாற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு, மூலனுார் நகர தி.மு.க., சார்பில், ரேக்ளா போட்டி நடந்தது. ஈரோடு எம்.பி., பிரகாஷ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆகியோர் இதைத் துவக்கி வைத்தனர். மூலனுார் நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் துறை தமிழரசு, கார்த்திக், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் கோவை, திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன. பூச்சிக்காளை, காங்கயம் காளை உள்ளிட்ட காளையினங்கள் பூட்டிய ரேக்ளா வண்டிகள் 200 மற்றும் 300மீ., ஆகிய போட்டிகளில் பங்கேற்றன. பார்வையாளர்கள் பங்கேற்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். முதல் பரிசாக எலக்ட்ரிக் பைக் மற்றும் தங்க நாணயம், கேடயம், ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.