ADDED : ஜூலை 29, 2024 12:06 AM
ஞாயிற்றுக்கிழமைகளில், 15 வேலம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகிலும், வியாழக்கிழமைகளில் அனுப்பர்பாளையம், சாமிநாதபுரம் ரோட்டோரத்திலும் சிறு வியாபாரிகள் கடை அமைத்து பொருட்களை விற்கின்றனர்.
மா.கம்யூ., கட்சியின் 15 வேலம்பாளையம் நகர செயலாளர் நந்தகோபால் கூறுகையில், ''அனுப்பர்பாளையம் வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் வசூல் செய்ய மாநகராட்சி சார்பில், தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் 'மாநகராட்சி அனுமதி கொடுத்துள்ளது' எனக் கூறி, 15 வேலம்பாளையம் மற்றும் சாமிநாதபுரம் ஆகிய பகுதியில் ரோட்டோர வியாபாரி களிடமும் வசூல் செய்கின்றனர். வியாபாரிகளிடம் வசூல் செய்வது தொடர்ந்தால், வியாபாரிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றார்.