ADDED : ஜூலை 29, 2024 12:08 AM
முக்குலத்தோர் தேசிய கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
திருப்பூரில் உள்ள அதன் மாநில தலைமை அலுவலகத்தில், அதன் நிறுவனர் ராஜா தலைமையில் இக்கூட்டம் நடந்தது. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பிரபு வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் விஜயகண்ணன், அழகுராஜா முன்னிலை வகித்தனர். அமைப்பின் வளர்ச்சி, புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், முக்குலத்தோர் சமுதாய முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து ஆலோசனை நடந்தது. முருகன் நன்றி கூறினார்.