/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திறந்த வெளியில் கொட்டப்படும் கோழிக்கழிவு திறந்த வெளியில் கொட்டப்படும் கோழிக்கழிவு
திறந்த வெளியில் கொட்டப்படும் கோழிக்கழிவு
திறந்த வெளியில் கொட்டப்படும் கோழிக்கழிவு
திறந்த வெளியில் கொட்டப்படும் கோழிக்கழிவு
ADDED : ஜூன் 03, 2024 01:15 AM

பல்லடம்;பல்லடம் வட்டாரத்தில், கறிக்கோழி வளர்ப்பு தொழில் பரவலாக நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பண்ணைகளில் கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு, விற்பனைக்கு செல்கின்றன. தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. அண்டை மாநிலங்களுக்கு சென்று திரும்பும் சில கறிக்கோழி வாகனங்களில் இருந்து எடுத்துவரப்படும் கோழி மற்றும் முட்டை கழிவுகள் பல்லடம் வட்டாரத்தில் திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
திறந்தவெளியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க, சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளனர். இருப்பினும், கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. கழிவுகளை திறந்தவெளியில் கொட்டும் வாகனங்கள் மற்றும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; உள்ளாட்சி நிர்வாகங்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.