/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாய்ந்த மின்கம்பம்; அருகில் அபாயம் சாய்ந்த மின்கம்பம்; அருகில் அபாயம்
சாய்ந்த மின்கம்பம்; அருகில் அபாயம்
சாய்ந்த மின்கம்பம்; அருகில் அபாயம்
சாய்ந்த மின்கம்பம்; அருகில் அபாயம்
ADDED : ஜூன் 03, 2024 01:15 AM

பல்லடம்;பல்லடம் அடுத்த, கரைப்புதுார் ஊராட்சி மீனாம்பாறை - -வீரபாண்டி செல்லும் ரோட்டில், மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'குடியிருப்புகள் அருகே உள்ள மின்கம்பம் நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. எதிர்பாராமல், மின்கம்பம் சாய்ந்தாலோ அல்லது முறிந்து விழுந்தாலோ, இதனுடன் இணைப்பில் உள்ள மின்கம்பிகள் குடியிருப்புகள் மீது விழுந்து பெரும் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.மின்கம்பத்தை உடனடியாக சரி செய்து அமைக்க வேண்டும். அருகில் உள்ள மற்றொரு மின்கம்பத்தில் உள்ள மின்கல பெட்டி கதவு இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. மழைக்காலம் என்பதால், மழைநீர் பெட்டிக்குள் இறங்கி மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பெட்டி தாழ்வாக இருப்பதால், குழந்தைகள் தொடும் அபாயமும் உள்ளது. மின்கல பெட்டியை உயர்த்தி அமைப்பதுடன், பெட்டியை மூடும் வகையில் கதவு அமைக்க வேண்டும்' என்றனர்.