ADDED : ஜூன் 03, 2024 01:16 AM
திருப்பூர்;வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், இலக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி, சேர்வகாரன்பாளையத்தில் உள்ள காலனியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் வசதிக்காக, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது.
இச்சூழலில், நேற்று மாலை இடியுடன் பெய்த கனமழையின் போது, தொட்டியின் மீது இடி விழுந்து சேதமாயிற்று. இதனால், அப்பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.