/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தரமற்ற விதை மாதிரி; ஆய்வில் அதிகாரிகள் உறுதி தரமற்ற விதை மாதிரி; ஆய்வில் அதிகாரிகள் உறுதி
தரமற்ற விதை மாதிரி; ஆய்வில் அதிகாரிகள் உறுதி
தரமற்ற விதை மாதிரி; ஆய்வில் அதிகாரிகள் உறுதி
தரமற்ற விதை மாதிரி; ஆய்வில் அதிகாரிகள் உறுதி
ADDED : ஜூன் 17, 2024 12:10 AM

பல்லடம்;விதை பரிசோதனை நிலையத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்ட விதை மாதிரிகளில், 37 தரமற்ற விதை மாதிரிகளை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பல்லடம் செயல்பட்டு வரும் விதை பரிசோதனை நிலையத்தில், கோவை மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் நர்கீஸ் ஆய்வு செய்தார். மூத்த வேளாண் அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தார்.
வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:
நடப்பு ஆண்டு இதுவரை, 1,271 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இதில், 37 விதை மாதிரிகள் தர மற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, விவசாயிகள், விதை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது அவசியமாகிறது.
ஆனி மற்றும் ஆடிப்பட்ட விதைப்புக்கு தயாராகும் விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள், பல்லடம், திருநகர் காலனியில் உள்ள விதை பரிசோதனை மையத்தின் மூலம் விதைகளின் தரத்தை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக, அவர் விதை மாதிரிகள் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறதா என்பது குறித்து நர்கீஸ் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பயிர்களுக்கு ஏற்ற முறையில் கணக்கிடப்படும் பல்வேறு முளைப்பு முறைகள், இயல்பான இயல்பற்ற நாற்றுகள், கடின விதை மற்றும் முளைவிடாத உயிருள்ள விதைகளின் விழுக்காடு ஆகியவை சரியாக கணக்கிடப்படுகிறது என்பது குறித்தும் விசாரித்தார்.
வேளாண் உதவி அலுவலர்கள் ஆய்வில் உடன் பங்கேற்றனர்.