/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பயறு வகை உற்பத்தி: அதிகரிக்க ஊக்குவிப்பு பயறு வகை உற்பத்தி: அதிகரிக்க ஊக்குவிப்பு
பயறு வகை உற்பத்தி: அதிகரிக்க ஊக்குவிப்பு
பயறு வகை உற்பத்தி: அதிகரிக்க ஊக்குவிப்பு
பயறு வகை உற்பத்தி: அதிகரிக்க ஊக்குவிப்பு
ADDED : ஜூன் 17, 2024 12:09 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், பயறு வகை உற்பத்தியை அதிகரிக்க, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மானிய தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், உணவு தானிய பயிர் களான நெல், தானியங்கள், பயறு வகை பயிர் உற்பத்தியை அதிகரிக்க வேளாண்மைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டத்தில், நெல், 10 ஆயிரத்து 558 எக்டர்; சிறுதானியங்கள், 56 ஆயிரத்து 933 எக்டர், பயறுவகை பயிர்கள், 18 ஆயிரத்து 790 எக்டர் சாகுபடியாகிறது.
பயறு வகை பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியுடன், பல்வேறு இனங்களில் விவசாயிகளுக்கு மானியம் வழங்குகின்றன.
தொழில்நுட்பங்கள் அடங்கிய உளுந்து மற்றும் பாசிப்பயறு செயல் விளக்கத்திடல் அமைக்க, எக்டருக்கு, 8,500 ரூபாய் மானியம்; கொண்டைக் கடலை பயிர் செயல் விளக்கத்திடல் அமைக்க, எக்டருக்கு, 3,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
உளுந்து, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு மற்றும் தட்டைப்பயறு ஆகிய பயிர்களில், 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட உயர் விளைச்சல் ரக விதைகள் வினியேகாத்திற்கு, கிலோவுக்கு, 50 ரூபாய் அல்லது, 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
பத்து ஆண்டுகளுக்கு உட்பட்ட உயர் விளைச்சல் ரகங்களின் விதை உற்பத்தி செய்யும் விவசாயி களுக்கு ஒரு கிலோவுக்கு, 25 ரூபாய் மானியம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
உயிர் உரங்கள் வினியோக இனத்திற்கு, ஒரு எக்டருக்கு, 300 ரூபாய் அல்லது, 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். பயறு நுண்ணுாட்ட சத்து மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் வினியோக இனத்திற்கு, ஒரு எக்டருக்கு, 500 ரூபாய், அல்லது, 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
மேலும் விபரங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் மானிய உதவி பெற வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.