/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வி.ஏ.ஓ.,களுக்கு எதிராக ஜமாபந்தியில் மக்கள் மனு வி.ஏ.ஓ.,களுக்கு எதிராக ஜமாபந்தியில் மக்கள் மனு
வி.ஏ.ஓ.,களுக்கு எதிராக ஜமாபந்தியில் மக்கள் மனு
வி.ஏ.ஓ.,களுக்கு எதிராக ஜமாபந்தியில் மக்கள் மனு
வி.ஏ.ஓ.,களுக்கு எதிராக ஜமாபந்தியில் மக்கள் மனு
ADDED : ஜூன் 26, 2024 01:24 AM
பொங்கலுார்;திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட கண்டியன்கோவில் கிராமம் இரண்டு வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது.
ஒரு கிராம நிர்வாக அலுவலர், விபத்தில் சிக்கி பல ஆண்டுகளாக வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார்.
இதனால், இரண்டு வருவாய் கிராமங்களையும் ஒருவர் மட்டும் கவனித்து வருகிறார். அவரும், வாரத்தில் இரண்டு நாள் மட்டுமே வருகிறார்; பொதுமக்கள் மொபைல் போனில் அழைத்தாலும் தொடர்பு கொள்ள முடிவதில்லை என்றும், மக்கள் பணி செய்ய லஞ்சம் கேட்கிறார் என்று கூறியும், அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டது.
இதேபோல, கண்டியன் கோவில் கிராமம் தங்காய்புதுாரை சேர்ந்த தங்கமுத்து என்பவர், 'கிராம நிர்வாக அலுவலர் போலி ஆவணங்களை தயார் செய்து உயர்மின் கோபுரம் அமைக்க வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று ஜமாபந்தியில் மனு அளித்துள்ளார்.