Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விண்ணப்பம் அல்ல... விரக்தியின் விளிம்பு; ரேஷன் கார்டுகள் கிடைக்காமல் 10 ஆயிரம் குடும்பங்கள் தவிப்பு

விண்ணப்பம் அல்ல... விரக்தியின் விளிம்பு; ரேஷன் கார்டுகள் கிடைக்காமல் 10 ஆயிரம் குடும்பங்கள் தவிப்பு

விண்ணப்பம் அல்ல... விரக்தியின் விளிம்பு; ரேஷன் கார்டுகள் கிடைக்காமல் 10 ஆயிரம் குடும்பங்கள் தவிப்பு

விண்ணப்பம் அல்ல... விரக்தியின் விளிம்பு; ரேஷன் கார்டுகள் கிடைக்காமல் 10 ஆயிரம் குடும்பங்கள் தவிப்பு

ADDED : ஜூன் 08, 2024 12:49 AM


Google News
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் குடும்பத்தினர், ரேஷன் கார்டு கேட்டு காத்திருக்கின்றனர். எப்போது கிடைக்குமோ!

தமிழக அரசு, ரேஷன் கார்டில் பெயர் உள்ள பெண்களுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில், பயனாளிகள் தேர்வு நடைபெற்றதால், கடந்த 2023 ஜூன் மாதம் முதல், புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டன. பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தாண்டு செப்டம்பர் மாதம் முதலே, மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனாலும், விண்ணப்பித்து காத்திருக்கும் குடும்பங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்குவது குறித்து தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆயிரக்கணக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள், ஒப்புதல் அளிக்கப்படாமலும்; ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு, கார்டு அச்சிடப்படாமலும் தேக்கமடைந்துள்ளன.

சிலருக்கு மட்டும்


ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், முகவரி மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளமுடிகிறது; புதிய விண்ணப்பங்கள், பரிசீலனைக்கு கூட எடுத்துக்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்தவகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சில நுாறு குடும்பங்களுக்கு மட்டும் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.

மார்ச் 16ம் தேதி லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குவந்தன. அதனால், கடந்த மூன்று மாதங்களாக புதிய ரேஷன் கார்டு வழங்க முடியவில்லை. விண்ணப்பித்து ஓராண்டாகியும், ரேஷன் கார்டு கிடைக்காமல், விரக்தியுடன் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us