ADDED : ஜூலை 21, 2024 12:36 AM

திருப்பூர்;திருப்பூரில் இருந்து நேற்று, 19 புதிய பஸ்கள் இயக்கம் துவங்கப்பட்டது.
புதிய பஸ் ஸ்டாண்ட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ், தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ., செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி புதிய பஸ்கள் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். கோவை கோட்ட போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஜோசப் டயாஸ், திருப்பூர் மண்டல பொதுமேலாளர் (பொறுப்பு) செல்வக்குமார் ஒருங்கிணைத்தனர்.
தாராபுரம், திருப்பூர் கிளை - 1க்கு தலா ஐந்து, திருப்பூர் இரண்டாவது கிளை - 4, பல்லடம் மற்றும் காங்கயத்துக்கு தலா, இரண்டு, உடுமலைக்கு ஒன்று என மொத்தம், 19 பஸ்கள் ஒதுக்கப்பட்டன.
அமைச்சர் 'டாட்டா'
பஸ் இயக்கத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, கலெக்டர் கிறிஸ்துராஜ், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் புதிய பஸ்சில் பயணித்தனர். பஸ்சின் முன் டிரைவர் 'சீட்' அருகே அமர்ந்து கொண்ட அமைச்சர் புதிய பஸ் குறித்து டிரைவரிடம் கேட்டார்.
பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ் வலம் வர, அங்கிருந்தவர்களுக்கு 'டாட்டா' காண்பித்தவாறே மகிழ்ச்சியுடன் பயணித்தார்.