Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'மாற்றுத்திறனாளிகளின் தேவையறிந்து பூர்த்தி செய்யும் சக் ஷம்'

'மாற்றுத்திறனாளிகளின் தேவையறிந்து பூர்த்தி செய்யும் சக் ஷம்'

'மாற்றுத்திறனாளிகளின் தேவையறிந்து பூர்த்தி செய்யும் சக் ஷம்'

'மாற்றுத்திறனாளிகளின் தேவையறிந்து பூர்த்தி செய்யும் சக் ஷம்'

ADDED : ஜூலை 21, 2024 12:37 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்;''மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்யும் இணைப்பு பாலம் போல், சக் ஷம் செயல்படுகிறது,'' என, தேசிய ஆலோசகர் ஆடிட்டர் ராமநாதன் பேசினார்.

மாற்றுத்திறனாளர் நலம் விரும்பும் தேசிய அமைப்பு - சக் ஷம் சார்பில், 'காலடி தேடி' என்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நல உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. திருப்பூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு,சக் ஷம் தேசிய ஆலோசகர் ஆடிட்டர் ராமநாதன் தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர் ரத்தினசாமி வரவேற்றார். சேவா பாரதி மாவட்ட தலைவர் பிரேம் பிரகாஷ் சிக்கா, ஸ்ரீகாமாட்சியம்மன் மண்டப டிரஸ்ட் தலைவர் சுப்பிரமணியம், ஆர்.எஸ்.எஸ்., கோட்ட செயலாளர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, துணை தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார், தி சென்னை சில்க்ஸ் இயக்குனர் பத்மா சிவலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

ஆடிட்டர் ராமநாதன் பேசியதாவது:

சிருங்கேரி சாரதா பீடத்தின், பீடாதிபதி பாரதீ தீர்த்த சுவாமிகள், சன்னியாஸம் ஏற்று, 50ம் ஆண்டில், கல்வி, குழந்தைகள் நலம் சார்ந்த அறப்பணிகள் நடந்து வருகிறது. திருப்பூர் தொழில்துறையினர், கேட்ட உதவிகளை செய்து கொடுக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்யும் இணைப்பு பாலம் போல், சக் ஷம் செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள், எவ்வித உதவி தேவையென்றாலும், சக் ஷம் அமைப்பை நாடி வரலாம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. சக்கர நாற்காலி, சிறப்பு படுக்கை, சிறப்பு இருக்கை, செயற்கை அவயம் உட்பட, 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான நல உதவி வழங்கப்பட்டது.

சக் ஷம் அமைப்பின் குட்டி கோவிந்தராஜ், பொருளாளர் கண்ணன், செயலாளர் தமிழ்செல்வன், மாநில நிர்வாகி சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் ரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

வித்யாஸ்ரம் சிறப்பு பள்ளி

முன்னதாக ஆடிட்டர் ராமநாதன் பேசுகையில், ''நடக்க முடியாத குழந்தைகள், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்காக, பாரதி வித்யாஸ்ரம் பள்ளி, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர் திருப்பதி கோவில் அருகே இயங்கி வருகிறது. இலவச பயிற்சியும், பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. குழந்தையாக இருக்கும் போதே பயிற்சி அளித்தால், உடல் பாதிப்புகளை சீராக்க முடியும். மேலும் விவரங்களுக்கு, சிருங்கேரி சாரதா பீடத்தின் சார்பில், இயங்கும் வித்யாஸ்ரம் பள்ளியை, 97514 81070 என்ற எண்களில் அணுகலாம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us